மனிதனாக பிறந்ததில் மகிழ்ச்சி துளியும் இல்லை…முத்தரையனாக பிறந்ததற்கு இணை வேறு எதுவும் இல்லை

வரலாறு

நம் குல பெருமைகளை அறிந்து போற்றிப் பாதுகாக்க வேண்டும் அவர்கள் வழிவந்த நம் பரம்பரையினரின் நீங்காக் கடமையும் உரிமையும் ஆகும்.
நான் உலக வரலாற்றையோ, நாட்டு வரலாற்றையோ எழுதப்புகவில்லை. எனது இனத்தையும், குலத்தையும் நான் அறிந்த, என் அறிவிக்குப் புலனாகும் வரலாற்றை தொகுத்துள்ளேன்.
இது பலருக்கு கனிச்சாராய் இனிக்கலாம். சிலருக்கு எட்டிக்காயாய்க் கசக்கலாம். ஆனால் எனக்கு உண்மையன எம் இன வரலாற்றை எழுதுவதொன்றே நோக்கம்.
போற்றுவோர் போற்றட்டும். புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும். தொடர்ந்து செல்வேன்.
வரலாறு என்பது கற்பனையாய் புனையும் கவிதையோ கதையோ இல்லை.
புதினமோ புராணமோ இல்லை.அது ஒரு புகைப்படமோ, ஓவியமோ இல்லை.வரலாற்றில் கற்பனைக்கோ, உயர்வு நவிற்சிக்கோ இடமில்லை.
இது கடந்த கால உண்மை நிகழ்வுகளின் பதிவேடு. உண்மை சம்பவங்களின் வரைபடம்.
ஒரு இனமும், சமுதாயமும், நாடும் முன்னேற அவை தங்களுடைய கடந்த கால வரலாற்றை தெளிவாக அறிந்திருக்கவேண்டும்.
தன்னை அறியாதவன், தன் இனத்தை உணராதவன், தன் சமூகசிந்தனை அற்றவன், தன் கடந்த கால வ்ரலாற்றை தெரியாதவன் ஜடமாகி, பிணமாகி பின் மண்னாகிறான்.
நாம் நம் முன்னோர்களின் ஆவணக்களை பாதுகாக்க மறந்ததினால் மற்றவர்கள் உரிமை கொண்டாட ஆரமிதுவிட்டனர்
இனியாது பாதுகாப்போம் என்ற கடமையுடன் ………
முத்தரைய குல நாகரீகத்தையும், பண்பாட்டையும், வளர்ச்சியையும் விளக்கும் வகையில் தெளிவாக உணர்ந்து மறைந்து போன அல்லது மறைக்கப்பட்ட பழைய வரலாற்றுச் சுவடுகளை நம் இளைய தலைமுறையினர் அறிய வழி செய்திடல் வேண்டும்.
அன்பும், கருனையும், பரிவும், பற்றும், பணிவும், வீரமும், விவேகமும் எம் குல சொத்து. இளைய தலைமுறையினர் இவை அறிந்து ஆர்வத்துடன் செயல்படின் வரலாற்றில் தடம் பதித்த எமது இனம் மீண்டும் காலத்தையும் வென்று நிற்க்கும் என்பதில் ஐயமில்லை.
நேற்று தோன்றிய கட்சிகள் சங்கங்கள சாதியை வைத்து காரியங்கள் சாதிப்பது அனைவரும் அறிந்ததே இந்நேரத்தில் நம் இனத்திற்குள் ஒற்றுமை அவசியமான ஒன்று…
இணையத்தில் நம் உறவுகளுக்கு நம்மாலான ஏதேனும் ஒரு தகவல் தெரிவிப்போம் உபயோகமாக …
ஒன்றுபடுவோம் .. வெல்வோம்…..
மனிதனாக பிறந்ததில் மகிழ்ச்சி துளியும் இல்லை…முத்தரையனாக பிறந்ததற்கு இணை வேறு எதுவும் இல்லை …சிதறி கிடக்கும் என் சொந்தங்களே அணி திரள்வீர் இன மானம் காக்க….
என்றும் அன்புடன் ….

உலக முத்தரையர் சங்கம்

முத்தரையர்கள் முன்னேற்றம் அடையாததற்கு காரணம் ?

16 மே, 2013

நான் மார்பை தட்டி சொல்லுவேன் நான் வலைபயபுள்ள என்று


மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனை காண அவரின் மதி அமைச்சர் (அ) சேனாதிபதியாக இருக்கும் பெரும்பிடுகு முத்தரையர் (இவர் நமது பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அல்ல...!!!! இந்த கதை நடப்பது நமது மன்னரின் ஆட்சி நடந்து முடிந்து நூறு ஆண்டுகளுக்கு பிறகு...) முத்தரையர் குலத் தோன்றல் வீரமல்லனை அழைத்து செல்கிறார் அப்போது./// மூவரும் சந்திப்புக்கு பிறகு மேல் மாடத்திற்க்கு சென்றார்கள், மாடத்தின் பின் பகுதிக்கு அப்பால் வைகை நதி சோம்பலுடன் தவழ்வது தெரிந்தது. கூட்டங்கூட்டமாக வானத்தில் செங்கால் நாரைகள் பறந்து சென்றன."உனக்கு நன்றாக வளை எறி வீசத் தெரியுமென்று முத்தரையர் சொல்கிறாரே, இந்த நாரைகளில் ஒன்றை வீசி வீழ்த்துவாயா?" என்றார் பாண்டியர்.முத்தரையர் விரைந்து சென்று, ஒரு வளை எறியைக் கொண்டு வந்து வீரமல்லனிடம் நீட்டினார். வளை எறியை கையில் பிடித்தவுடன் வீரமல்லன் வேறு மனிதனாகி விட்டான்."முதல் நாரையா ! இடையில் உள்ளவற்றில் ஒன்றா ! கடைசியில் பறப்பதா?"சுந்தரபாண்டியர் திடுக்கிட்டு அவன் பக்கம் திரும்பினார். வீரமல்லன் தன் விழிகளை இடுக்கி வானத்தைப் பார்த்துக் கொண்டே, "சொல்லுங்கள் அரசே?" என்று துடித்தான்."முதல் நாரை!" என்றார் பாண்டியர். பத்துப் பதினைந்து பறவைகளில் ஏதாவதொன்றை வீழ்த்துவதென்றாலே எவ்வளவு கடினம் என்பதை அறிந்தவர்.வீரமல்லன் சுழற்றிவிட்ட சின்னஞ்சிறு வளை எறி விர்ரென்று மேலே வட்டமிட்டுச் சென்றது. அது புறப்பட்டது ஒரு திசை, திரும்பியது மற்றொரு திசை. மூன்றாவது திசையில் பறந்துகொண்டிருந்த முதல் நாரை தலைகுப்புறக் கீழே விழுந்து கொண்டிருந்தது.சுந்தரபாண்டியர் தமது செருக்கையும் மறந்து, "முத்தரையரே ! இளைஞன் வல்லவன் தான்" என்று வாய்விட்டுக் கூறினார். //// (பக்கம் – 186 - 187)இவ்வாறு வளை எறியில் வல்லவர்கள்தான் இன்றைய "வளையர்கள்". தமிழின் வழக்கமான ளகரத்திற்க்கு பதிலாக லகரம் என்று மாற்றி இவர்களை "வலையர்கள்" ஆக்கிவிட்டார்கள், இது ஏதோ தற்செயலாக நடந்திருக்கும் என்று சொல்வதற்க்கு இல்லை... இதுவும் நமக்கு எதிரான வரலாற்று இரட்டிப்பு பணிகளில் ஒன்றுதான்... அப்படியானால் நமக்கு எதிரிகள் பல நூற்றாண்டுகளுக்கு பிறகும் தொடர்கிறார்கள் என்பதனை நாம் அறிய வேண்டும். அதனால் நமது பெருமையோ, நமது வீரமோ குறைந்து விடுமா என்ன ? "வளையர்" என்று அழைத்தாலும், "வலையர்" என்று அழைத்தாலும் நமது பெயர் காரணம் ஒன்றே... !!!நான் எனது ஒரு நண்பனிடம் கேட்டேன் " நீங்கள் என்ன சாதி ?" என்று மிகுந்த தயக்கத்திற்க்குப் பிறகு அவரின் மறுமொழி "வலையர்" என்பது, எனது இரண்டாவது கேள்வி " வலையர் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா ?" என்ற பொழுது "தெரியாது" என்றார், உயர்வான வீரக்குடியில் பிறந்தவர் சொல்லும் பதில் இப்படிதான் இருக்க வேண்டுமா ? நெஞ்சு நிமிர்த்தி பதில் அளித்திருக்க வேண்டாமா ? பிற பிரிவுகளை சார்ந்தவர்களுக்கு தெரியவில்லை எனபது கூட இங்கு பிரச்சனையில்லை, அதே வீரக்குடியில் பிறந்து பிறப்பின் பெருமை அறியாமல் இருக்க முடியுமா ? வளை எறியில் வல்லவர்களான "வலையர் குலத்தவரை" பிற சமூகத்தவர் அறியாமையால் நம்மை பரிகசிக்கும் நோக்கில்(வேறு அர்த்தங்கள் தொனிக்க) "வலையர்" என்று அழைக்கும் போது நாம் நம்முடைய அறியாமையால் துவண்டு போவது சரிதானா ? ஏன் பிறரை சொல்ல வேண்டும் நமது இனத்திற்க்குள்ளேயே இதனை பிரச்சனையாக்க சிலர் முயன்றபோது என்னிடம் போதிய ஆதாரம் இல்லாமையால் சரியான பதிலடி கொடுக்க முடியவில்லை. இனி நம்மை சிறுமை படுத்துவதாக எண்ணி நம்மை யாரேனும் "வலையர்" என்று அழைத்தால் நாம் நெஞ்சு நிமிர்த்தி பெருமிதத்தோடு சொன்னவரை நோக்கி நமது பெயருக்கான காரணத்தைச் சொல்லி அவரை சிறுமைப் படுத்துங்கள்.மேலும் "கங்கை கொண்டான்" என்று பெருமிதப்படுத்தப் படும் ராஜேந்திர சோழன், கங்கை கரைக்கே செல்லவில்லை....!! அவனுக்காக கங்கை வரை பெரும்படை எடுத்து கங்கை நீரை கொண்டு வந்தது முத்தரையர் குலக் கொழுந்து சோழப் பேரரசின் வடப் பகுதி மாதண்ட நாயகர், கண்டோர் நடுங்கும் காலன், பகைவர்களை பதற வைக்கும் பலபீமன் அரையன் ராஜராஜன், அவருடைய பெரும்படைதான் கங்கை வரை சென்று ராஜேந்திர சோழனுக்கு "கங்கை கொண்டான்" என்ற பெயர் வரவும், தஞ்சைக்கு மாற்றாக புதிதாக "சோழர்கள்" நிர்மானித்த "கங்கை கொண்ட சோழப்புரம்" என்ற புதிய தலை நகருக்கு அந்த பெயர் வரவும் காரணமாக இருந்தார். அரயர் ராஜராஜனின் போர்படை வீரர்களும் அவர்தம் குடும்பமும், காஞ்சிபுரத்தில் இருந்து "சோழப்பேரரசுக்கு" பாதுகாவல் செய்து அங்கேயே தங்கி இருக்க முடியும் என்பதுதான் இதன் மூலம் நாம் அறியக் கூடிய செய்தியாக இருக்கிறது. நாவலாக இருந்தாலும் நமது பெருமை உலகறிய செய்த "அகிலனுக்கு" நாம் கடமைப்பட்டவர்காளகிறோம்.இன்னும் ஏராளமான தகவல்களை தாங்கி நிற்க்கும் "வேங்கையின் மைந்தன்" நிச்சயமாக இன்றைய தலைமுறை வாசிக்க வேண்டியதும், போற்ற வேண்டியதுமான நாவலாகும்.

இந்த நாவலை இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் http://psivasubramani.wordpress.com/category/historical-novels/vengayin-maindhan/"வலையர்" என்ற கர்வத்தோடு....

MANIVANNAN AMBALAKKARAR
கருத்துரையிடுக

Windows Live Messenger + Facebook