மனிதனாக பிறந்ததில் மகிழ்ச்சி துளியும் இல்லை…முத்தரையனாக பிறந்ததற்கு இணை வேறு எதுவும் இல்லை

வரலாறு

நம் குல பெருமைகளை அறிந்து போற்றிப் பாதுகாக்க வேண்டும் அவர்கள் வழிவந்த நம் பரம்பரையினரின் நீங்காக் கடமையும் உரிமையும் ஆகும்.
நான் உலக வரலாற்றையோ, நாட்டு வரலாற்றையோ எழுதப்புகவில்லை. எனது இனத்தையும், குலத்தையும் நான் அறிந்த, என் அறிவிக்குப் புலனாகும் வரலாற்றை தொகுத்துள்ளேன்.
இது பலருக்கு கனிச்சாராய் இனிக்கலாம். சிலருக்கு எட்டிக்காயாய்க் கசக்கலாம். ஆனால் எனக்கு உண்மையன எம் இன வரலாற்றை எழுதுவதொன்றே நோக்கம்.
போற்றுவோர் போற்றட்டும். புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும். தொடர்ந்து செல்வேன்.
வரலாறு என்பது கற்பனையாய் புனையும் கவிதையோ கதையோ இல்லை.
புதினமோ புராணமோ இல்லை.அது ஒரு புகைப்படமோ, ஓவியமோ இல்லை.வரலாற்றில் கற்பனைக்கோ, உயர்வு நவிற்சிக்கோ இடமில்லை.
இது கடந்த கால உண்மை நிகழ்வுகளின் பதிவேடு. உண்மை சம்பவங்களின் வரைபடம்.
ஒரு இனமும், சமுதாயமும், நாடும் முன்னேற அவை தங்களுடைய கடந்த கால வரலாற்றை தெளிவாக அறிந்திருக்கவேண்டும்.
தன்னை அறியாதவன், தன் இனத்தை உணராதவன், தன் சமூகசிந்தனை அற்றவன், தன் கடந்த கால வ்ரலாற்றை தெரியாதவன் ஜடமாகி, பிணமாகி பின் மண்னாகிறான்.
நாம் நம் முன்னோர்களின் ஆவணக்களை பாதுகாக்க மறந்ததினால் மற்றவர்கள் உரிமை கொண்டாட ஆரமிதுவிட்டனர்
இனியாது பாதுகாப்போம் என்ற கடமையுடன் ………
முத்தரைய குல நாகரீகத்தையும், பண்பாட்டையும், வளர்ச்சியையும் விளக்கும் வகையில் தெளிவாக உணர்ந்து மறைந்து போன அல்லது மறைக்கப்பட்ட பழைய வரலாற்றுச் சுவடுகளை நம் இளைய தலைமுறையினர் அறிய வழி செய்திடல் வேண்டும்.
அன்பும், கருனையும், பரிவும், பற்றும், பணிவும், வீரமும், விவேகமும் எம் குல சொத்து. இளைய தலைமுறையினர் இவை அறிந்து ஆர்வத்துடன் செயல்படின் வரலாற்றில் தடம் பதித்த எமது இனம் மீண்டும் காலத்தையும் வென்று நிற்க்கும் என்பதில் ஐயமில்லை.
நேற்று தோன்றிய கட்சிகள் சங்கங்கள சாதியை வைத்து காரியங்கள் சாதிப்பது அனைவரும் அறிந்ததே இந்நேரத்தில் நம் இனத்திற்குள் ஒற்றுமை அவசியமான ஒன்று…
இணையத்தில் நம் உறவுகளுக்கு நம்மாலான ஏதேனும் ஒரு தகவல் தெரிவிப்போம் உபயோகமாக …
ஒன்றுபடுவோம் .. வெல்வோம்…..
மனிதனாக பிறந்ததில் மகிழ்ச்சி துளியும் இல்லை…முத்தரையனாக பிறந்ததற்கு இணை வேறு எதுவும் இல்லை …சிதறி கிடக்கும் என் சொந்தங்களே அணி திரள்வீர் இன மானம் காக்க….
என்றும் அன்புடன் ….

உலக முத்தரையர் சங்கம்

முத்தரையர்கள் முன்னேற்றம் அடையாததற்கு காரணம் ?

1 மே, 2013

நேரு மறைவு கற்றுதந்த பாடம்...


முத்துபேட்டையில் நேரு ஆட்டோ மொபைல்ஸ் என்ற நிறுவனத்தை திறம்பட நிர்வகித்து அதன் மூலம் சுற்று வட்டார பகுதி இளைஞர் மத்தியில் நல்ல பெயரும் ,அறிமுகமும் கொண்டிருந்தார் நேரு .. தன் நிறுவனத்தின் மூலம் பல இளைஞர்களுக்கு வேலையும் வழங்கி வந்தார் .இந்த சமயத்தில் முத்துபேட்டையில் அடிக்கடி நடைபெறும் தேவர் _முஸ்லிம் சண்டை .இந்து _முஸ்லிம் சண்டை என பெயரிடப்பட்டது .இதில் கலந்து கொள்ள அவரின் வாடிக்கையாளரும் ,நண்பருமாகிய .தேவர் இனத்தை சேர்ந்த ஒருவரால் ,நம் சமுதாய இளைஞர் களிடம் செல்வாக்குடன் இருந்த நேருவை கட்டாயமாக உள்ளே கொண்டு சென்றார் .நேருவும் நட்பிற்கு கைமாறாக நம் சமுதாய மக்களை திசை திருப்பி இந்த பிரச்சினைகளை கண்டு கொள்ளக் கூடிய ஒரு
மனநிலைக்கு கொண்டு வந்து விட்டார். இந்த சந்தர்ப்பங்களை பயன் படுத்தி நேருவின் நண்பர் .( KARUPU ) பாரதீய ஜனதா கட்சி .ஒன்றிய செயலாளர் பதவி பெறுகிறார் ..அதற்க்கு நேரு பல வகையிலும் துணையாக இருந்தார்.

நம் கிராமங்கள் தோறும் பா.ஜ .க .கொடிகள் ஆக்கிரமித்து கொண்டது .இந்த சமயத்தில் 2001 இல் உள்ளாட்சி தேர்தல் ,மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு எல்லா கட்சிகளும் போட்டி ,நம் இனத்தின் .தமிழர் பூமி சார்பாகவும் வேட்பாளர் போட்டியிடுகின்றார் ,மிக நம்பிக்கையுடன் ஏனென்றால் நம் இன வாக்குகளே வெற்றியை முடிவு செய்யும் .ஆனால் தேவர் இனத்தை சேர்ந்த நேருவின் நண்பர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி .இதற்க்கு முழு காரணமும் நேரு என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை KARUPU க்கு அரசியல் வளர்ச்சியும் ,அடிதடி கும்பலின் துணையும் வட்டாரத்தில் அதிகமான கட்டை பஞ்சாயத்துகளை உருவாக்குகிறது .இந்த நிலையில் ஜம்புவநோடை கிராமத்தை சேர்த்த முத்தரையர் இன பெண்ணை தலித் இனத்தவன் அழைத்து சென்று விடுகிறான் .. நேருவின் கருத்துக்கு எதிராக பேசி முடிக்கப்பட்ட ஒரு கலப்பு திருமண ,விவகார கட்டை பஞ்சாயத்தால் ,நேரு அதிருப்பதி அடைகிறார் . தன்னால் உருவாக்கப்பட்ட நண்பன் நட்பை விட தேவர் என்பதை நேருவுக்கு புரிய வைக்கிறார் . தனது குரலுக்கு மரியாதை இல்லை என்பதையும், நட்பைவிட சாதி உணர்வே பெரிதாக கருதிய நண்பரின் துரோகத்தையும் கண்டு மனம் வெதும்பி .அவரிடம் உள்ள நம் சமுதாய மக்களை முத்தரையர் சங்கத்தின் மூலம் தாமே தலைமை ஏற்று வழி நடத்திச் செல்ல விரும்பி அதற்க்கான முயற்ச்சிகளை தொடங்குகிறார் . இதற்கு முன்பு சங்கத்தை வழி நடத்திய அலங்காடு LSB , மேகநாதன் , தமிழழகன் அனைவரும் ஒரு மனதாக ஒப்புதலும் தெரிவித்தனர... மே மாதம் 2 ஆம் தேதி அலங்காடு LSB இல்லத்தில் அனைவரது முன்னிலையிலும் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது .எதிர்வரும் மே 23 இல் நேரு தலைமையில் நமது மன்னரின் சதய விழா கொண்டாடுவது என முடிவு செய்யப்படுகிறது ... இதற்கிடையில் ஜாம்புவானோடையில் ,நேருவிற்கும் ,அவரது தேவர் நண்பருக்கும் சொந்த கிராமம் .அங்கு இரவு நடந்த கோவில் திருவிழா நிகழ்ச்சியில்சொந்த கிராமம் என்பதாலோ என்னவோ நேரு தனியாக கலந்து கொள்கிறார் . ஆனால் இது தேவர்களை அதிகமாக கொண்ட கோவில் திருவிழா அன்று அவர்களின் மண்டகப்படி . ஆனால் கொலைகாரர்கள் முன்பே திட்டமிட்டு காத்திருந்துள்ளனர் .திருவிழாவின் ஒரு பகுதியாக பிரபலமான குழுவினரின் இசை கச்சேரி நடைபெறுகிறது .அங்கு சென்றிருந்த ஒரு சில நம் இளைஞர்களும் கவனத்தை அதில் செலுத்தியிருந்தனர் ,நடைபெறப் போகும் விபரீதம் அறியாமல். சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நேருவுக்கு நன்கு அறிமுகமான சில தேவரின முன்னாள் நண்பர்களால் தனியாக பேசவேண்டும் ,என்று கூறி வெளிச்சம் குறைவான பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார் .ஆனால் இது சூழ்ச்சி தம்மை தாக்க போகிறார்கள் என்பதை அந்த சமயம் அங்கு ஆயுதத்துடன் நின்று கொண்டிருந்த தன்னால் உருவாக்கப்பட்ட நண்பரை பார்த்து நிதானிப் பதற்குள் தாக்கி கொலை செய்யப் பட்டார்........
கருத்துரையிடுக

Windows Live Messenger + Facebook