6 ஏப்., 2013

பொது சொத்து சேத வழக்கு முத்தரையர் சங்க தலைவர் 55 பேர் கோர்ட்டில் ஆஜர் 17ம் தேதி மீண்டும் விசாரணை

பொதுச் சொத்துகளை சேதப்படுத்திய வழக்கு தொடர் பாக முத்தரையர் சங்கத்தலைவர் உள்பட 56 பேர் திருச்சி கோர்ட்டில் நேற்று ஆஜராகினர்.
பெரும்பிடுகு முத்தரையர் சதயவிழா கடந் தாண்டு மே 23ம் தேதி திருச்சியில் நடந்தது. அப் போது தமிழ்நாடு முத்தரையர் சங்கம் சார்பில் திருச்சி ஒத்தக்கடை பகுதியில் உள்ள முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அப்போது நடந்த பேர ணியில் பொதுமக்களு டன் மோதல் ஏற்பட்டதில் முத்தரையர் சங்கத்தினர் பொதுச் சொத் துகளை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து முத்தரையர் சங்கத்தலைவர் விஸ்வநாதன், அவரது மகன் ராம்பிரபு உள் ளிட்ட 57 பேர் மீது காந்தி மார்க்கெட் போலீ சார் வழக்குப்பதிவு செய்தனர். பொதுச் சொத்துகளை சேதப்படுத்துதல், அரசு ஊழியர்களை பணிசெய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிந்து அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் அனைவரும் வெளியே வந்தனர். 
இது தொடர்பான வழக்கு விசாரணை திருச்சி மாவட்ட 5வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை கடந்த 1ம் தேதி வந்த போது வழக்கு விசாரணையை 2வது கூடுதல் உதவி அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து 3ம் தேதி அனை வரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். 
இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை நேற்று வந்தது. ராம்பிரபு தவிர, விஸ்வநாதன் உள்பட 56 பேர் நீதிபதி ஜெயராஜ் முன் ஆஜராகினர். ராம்பிரபு சார்பில் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்டு மனு அளிக்கப்பட் டது. விசாரித்த நீதி பதி, வழக்கு விசார ணை யை வரும் 17ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கனவு காதல்

நிலைப்பதில்லை  என்றும்  தெரிந்தும்  அவள்  நினைவலைகள்  தொடருகிறது.  கனவாக... .. .. அவள்  தோழியிடம் கூறி எடுத்துவிட்டால் புகைப்படம் என்  நினைவ...