மனிதனாக பிறந்ததில் மகிழ்ச்சி துளியும் இல்லை…முத்தரையனாக பிறந்ததற்கு இணை வேறு எதுவும் இல்லை

வரலாறு

நம் குல பெருமைகளை அறிந்து போற்றிப் பாதுகாக்க வேண்டும் அவர்கள் வழிவந்த நம் பரம்பரையினரின் நீங்காக் கடமையும் உரிமையும் ஆகும்.
நான் உலக வரலாற்றையோ, நாட்டு வரலாற்றையோ எழுதப்புகவில்லை. எனது இனத்தையும், குலத்தையும் நான் அறிந்த, என் அறிவிக்குப் புலனாகும் வரலாற்றை தொகுத்துள்ளேன்.
இது பலருக்கு கனிச்சாராய் இனிக்கலாம். சிலருக்கு எட்டிக்காயாய்க் கசக்கலாம். ஆனால் எனக்கு உண்மையன எம் இன வரலாற்றை எழுதுவதொன்றே நோக்கம்.
போற்றுவோர் போற்றட்டும். புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும். தொடர்ந்து செல்வேன்.
வரலாறு என்பது கற்பனையாய் புனையும் கவிதையோ கதையோ இல்லை.
புதினமோ புராணமோ இல்லை.அது ஒரு புகைப்படமோ, ஓவியமோ இல்லை.வரலாற்றில் கற்பனைக்கோ, உயர்வு நவிற்சிக்கோ இடமில்லை.
இது கடந்த கால உண்மை நிகழ்வுகளின் பதிவேடு. உண்மை சம்பவங்களின் வரைபடம்.
ஒரு இனமும், சமுதாயமும், நாடும் முன்னேற அவை தங்களுடைய கடந்த கால வரலாற்றை தெளிவாக அறிந்திருக்கவேண்டும்.
தன்னை அறியாதவன், தன் இனத்தை உணராதவன், தன் சமூகசிந்தனை அற்றவன், தன் கடந்த கால வ்ரலாற்றை தெரியாதவன் ஜடமாகி, பிணமாகி பின் மண்னாகிறான்.
நாம் நம் முன்னோர்களின் ஆவணக்களை பாதுகாக்க மறந்ததினால் மற்றவர்கள் உரிமை கொண்டாட ஆரமிதுவிட்டனர்
இனியாது பாதுகாப்போம் என்ற கடமையுடன் ………
முத்தரைய குல நாகரீகத்தையும், பண்பாட்டையும், வளர்ச்சியையும் விளக்கும் வகையில் தெளிவாக உணர்ந்து மறைந்து போன அல்லது மறைக்கப்பட்ட பழைய வரலாற்றுச் சுவடுகளை நம் இளைய தலைமுறையினர் அறிய வழி செய்திடல் வேண்டும்.
அன்பும், கருனையும், பரிவும், பற்றும், பணிவும், வீரமும், விவேகமும் எம் குல சொத்து. இளைய தலைமுறையினர் இவை அறிந்து ஆர்வத்துடன் செயல்படின் வரலாற்றில் தடம் பதித்த எமது இனம் மீண்டும் காலத்தையும் வென்று நிற்க்கும் என்பதில் ஐயமில்லை.
நேற்று தோன்றிய கட்சிகள் சங்கங்கள சாதியை வைத்து காரியங்கள் சாதிப்பது அனைவரும் அறிந்ததே இந்நேரத்தில் நம் இனத்திற்குள் ஒற்றுமை அவசியமான ஒன்று…
இணையத்தில் நம் உறவுகளுக்கு நம்மாலான ஏதேனும் ஒரு தகவல் தெரிவிப்போம் உபயோகமாக …
ஒன்றுபடுவோம் .. வெல்வோம்…..
மனிதனாக பிறந்ததில் மகிழ்ச்சி துளியும் இல்லை…முத்தரையனாக பிறந்ததற்கு இணை வேறு எதுவும் இல்லை …சிதறி கிடக்கும் என் சொந்தங்களே அணி திரள்வீர் இன மானம் காக்க….
என்றும் அன்புடன் ….

உலக முத்தரையர் சங்கம்

முத்தரையர்கள் முன்னேற்றம் அடையாததற்கு காரணம் ?

29 ஏப்., 2013

முத்தரையர் திருவிழா - மே 23


வணக்கத்திற்க்குறிய உறவுகளே... "பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1338 - வது பிறந்த நாள்" வருகின்ற 23/05/2013 அன்று நமது உறவுகள் உற்சாகமாக கொண்டாட ஆயத்தமாகிவரும் இந்தசூழ்நிலையில் சில விசயங்களை நினைவுபடுத்த வேண்டியது எனது கடமை என்று கருதுகிறேன்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக சில நெருடல்களுடன் பேரரசரின் பிறந்த தினம் கொண்டாடும் நிலை 2011- ம் வருடம் அன்று புதிதாக அமைச்சரான பதவி ஏற்று முதல் அரசு நிகழ்ச்சியாக "பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின்" சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு சென்று சிறிது நேரத்தில் வாகன விபத்தில் மறைந்த மரியாதைக்குறிய மரியம்பிச்சையின் மறைவை அடுத்து அந்த ஆண்டு நம்மால் பேரரசரின் பிறந்த நாளினை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது.

2012 - ம் வருடம் மிகுந்த எதிர்பார்ப்போடு, மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாட எண்ணி இருந்த வேளையில் காவல்துறையின் ஒத்துழைப்பின்றி சில விரும்ப தகாத சம்பவங்கள் நடந்து நமது சமூகப் பெரியவர்கள் சிறைச்சாலை செல்லும் அளவிற்க்கு நம்மை இட்டு சென்றது, இதில் பிறர் மீது நாம் குற்றம் சொல்லும்முன் நம்மிடையே இருக்கும் சில குறைபாடுகளையும் களைய வேண்டியது காலத்தின் கட்டாயம் தன்னுடைய பிறந்த நாள் அன்று தனது வாரிசுகளை காண ஆவலாய் காத்திருக்கும் "பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்" நம்மில் சிலருடைய தகாத செய்கையினால் வருந்துவது ஏற்புடையதன்று, அதனால் இந்த வருடம் நாம் திட்டமிடலுடன் பேரரசரின் பிறந்த நாளினை முன்னெடுக்க வேண்டும்

யாரோ ஒரிரிவர் செய்யும் தவறுகளுக்காக மதிப்புமிக்க நமது தலைவர்கள் சிறை செல்வது நியாயமா? குறைந்தது ஒரு லட்சம் நமது உறவினர்கள் ஒரே இடத்தில் கூடும்பொழுது இயற்க்கையாக நமக்குஉற்சாகம் ஏற்படுவது இயல்புதான் என்றாலும் அது ஏனைய சக மக்களை பாதிக்காமல், அவர்களின்சுதந்திரதிற்க்கு இடைஞ்சல் இல்லாமல் இருக்கும்வரை சரியானதாக இருக்கும். நம்மை கட்டுபடுத்தும்அதிகாரம் உலகில் யாருக்கும் இல்லை ஆதலால் நாமே நமக்கு சில கட்டுபாடுகளை விதித்துக்கொள்வது, நமது பேரரசர் எத்தனை ஆசைகளோடு நம்மை வரவேற்க காத்திருக்கின்றாரோ அதற்க்குவிரோதம் இல்லாமல், யாருக்கும் தொந்தரவாக இல்லாமல் மகிழ்ச்சியோடு இந்த விழாவினை நடத்த சில கட்டுபாடுகளை நாம் கடைபிடிக்க வேண்டும்.

1) ஒழுக்கம் என்பதை உலகிற்க்கே சொல்லி தந்தவர்கள் "முத்தரையர்கள்" பின் நாம் மட்டும் எப்படி அதனை மீற முடியும் ? ஆகவே தலையில் ரிப்பன் கட்டி வருவது, விசில் அடிப்பது, ஆபாசமான (அ) வன்முறையான கோசங்கள் எழுப்புவது போன்றவற்றினை முழுவதுமாக தவிர்க்க வேண்டும். கவனமாக இருக்க வேண்டும் சமூக விரோதிகள் நமது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த நம்முடனே வந்து இந்த செயல்களை செய்ய முற்படலாம், அவர்களை கண்காணிக்க வேண்டியதும் நமது கடமை

2) போக்குவரத்தினை ஒழுங்குபடுத்த காவல்துறை கடந்த வருடம் போல தவறுமேயானால், நமது இளைஞர்களே அந்த பணியினை ஏற்றிட வேண்டும். இதற்க்காக திருச்சி மாநகரை வசிப்பிடமாக கொண்ட நமது இளைஞர்களை கொண்டு "ஒழுங்கு பாதுகாப்பு படை" அமைக்கப்பட வேண்டும், இதில் இனத்தின் மீது பற்று கொண்ட எல்லா நமது சமூக அமைப்பில் இருப்பவர்களும் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும், பிறந்த நாள் அன்று வேறு பொதுகூட்டங்கள் அல்லது பேரணி நடத்தும் சங்கங்கள் "இளைஞர் படை" அமைப்பது கட்டாயம், அது நமக்கு எதிர்காலங்களில் வரும் இன்னல்களை தவிர்க்க உதவும்.

3) பிரதானமானது "மது போதையில்" வருபவர்களை அது யாராக இருந்தாலும் அனுமதிக்கக்கூடாது, இன்றைய தமிழகத்தின் மிகப் பெரிய சாபகேடாக உள்ள மதுவை அருந்தி நாம் கடவுளாகவே கருதும் பெரும்பிடுகு முத்தரையரின் அருகில் வருவதை உண்மையான எந்த முத்தரையனும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், இதனை நிச்சயமான இளைஞர்கள் கண்காணிக்க வேண்டும், மன்னரின் புகழுக்கும், நமது குலப் பெருமைக்கும் களங்கம் ஏற்படுத்தும் எந்த செயலையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

4) மரியாதை செலுத்த செல்லும்போது கும்பலாக இல்லாமல் தனி தனி நபர்களாக வரிசையில் சென்று மரியாதை செலுத்துவது அவசியம், இதற்க்கு சற்று பொறுமை வேண்டும். இதனை பார்க்கக் கூடிய பிற சமூகத்தவர் நிச்சயமாக நம்மைக் குறித்து பெருமிதமாகவே நினைத்துக் கொள்வார்கள்,

இந்த கட்டுபாடுகளையும், விதிமுறைகளையும் நமக்கு நாமே விதித்துக் கொள்வதன் மூலம் தேவையற்ற அவபெயரினையும் தவிர்த்திடவும், நம் குலப் பெருமையை காத்திடவும் முடியும், இந்த விதிமுறைகள் கடைபிடிக்க முடியாத அளவிற்க்கு ஒன்றும் கடினமானது இல்லை. நாம் கூடி இருக்கும் இடங்களில் கூச்சல் இடுவது நம்து வீரத்திற்க்கு இழுக்கு...! சிங்கத்தை சின்னமாக கொண்ட நாம் சிறுபிள்ளை தனமான காரியங்கள் செய்தல் ஆகாது...!!! இன்று மட்டுமல்ல என்றும் நாம் கொண்டாடும் ஒரு நாள் மே- 23 ஆகவே இந்த நாள் நாம் பெருமைபட வேண்டிய நாளே தவிர, யார் மனதையும் புண்படுத்தும் நாள் அல்ல...!!!

இந்த விசயங்கள் என் இனத்தை சிறுமை படுத்த எழுதவில்லை....!! என் இனம் தலை நிமிர்ந்து எம் மன்னவனைப் போல நிற்க வேண்டி எழுதப்பட்டது. வேறு யாரோ செய்கிறார்கள் என்பதற்க்காக நமது குலப்பெருமையை விட்டுக்கொடுக்க முடியாது என்பது எனது உறவுகள் அறியாதது இல்லை ஆனாலும் ஞாபகப்படுத்த வேண்டியது எனது கடமை.

பேரரசரின் புகழ் பாட மே- 23 ல் திருச்சியில் திரளுங்கள்,

திசைகள் அதிர...!

அரசியல் பழக...!!

அகிலமும் நோக்க...!!!

அணி அணியாய்...! அமைதியின் வடிவாய்...!!!

திரளுங்கள் திருச்சியில்.....

உங்களில் ஒருவனாய்... மன்னரின் புகழ்பாடி நிறைவு செய்யும்

உங்கள் சஞ்சய்காந்தி அம்பலகாரர்,
ஒருங்கிணைப்பாளர்,
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்.

http://illamsingam.blogspot.ae/2013/04/23.html


MANIVANNAN AMBALAKKARAR
கருத்துரையிடுக