6 ஏப்., 2013

தமிழ்நாடு முத்தரையர் சங்கம் நடத்திய முக்கிய போராட்டம் : (தமிழ்நாடு முத்தரையர் சமூக சங்க 100 ஆண்டு வரலாறு என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டது )



15/04/1987 ல் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் முத்தரையர் சங்கம் நடத்திய முக்கிய போராட்டம் ஆகும் ...இது மாண்புமிகு முதலவர் எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்கள் ஆட்சியில் நடைபெற்றது ..

உண்ணாவிரதிற்கான கோரிக்கைகள் :
1...தமிழக மந்திரி சபையில் முத்தரையர்க்கு பிரதி நிதித்துவம் கோருதல் ...
2...தமிழ்நாடு தேர்வாணைக் குழுவில் முத்தரையர் ஒருவரை நியமனம் செய்தல் ..
3...தமிழகத்தில் ஜாதி வாரி மக்கள் தொகையை கணக்கெடுத்தல் ...
4...மக்கள் தொகை அடிப்படையில் கல்வி வேலைவாய்ப்பில் அதிக இட ஒதிக்கீடு போன்ற முக்கியமான பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு முத்தரையர் சங்க தலைவர் டாக்டர் .திரு எம்.வேங்கடசாமி தலைமையில் முத்தரையர் சங்கத்தினர் சென்னை மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை அருகில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர்.
இதற்க்கு பல அமைப்புக்கள் ஆதரவு தெரிவித்தது ... இதற்க்கு வன்னியர் சங்க மாநில தலைவர் திரு. சா.சுப்பிரமணியம் ஐ.ஏ.ஏஸ் (ஒய்வு ) அவர்கள் முத்தரையர் சங்க தலைவரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் ...,மற்றும் இந்த நியாமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமாறு தமிழக அரசை கேட்டுக்கொண்டார் ..

அரசு பணிகளில் இடஒதிக்கீடு சதவீதப் போரில் சரித்திரம் படைப்போம் !
ஓடுகக்பட்டோருக்கு தோல் கொடுப்போம் !!
ஓரவஞ்சனை செய்வோரை துரத்தியடிப்போம் !!
வெல்லட்டும் நமது விவேகங்கள் !!! என்று முழங்கி போராட்டம் வெற்றி கரமாக நடைபெற்றது ...

தங்களது நியாமான கோரிக்கைகளை தாங்கள் ஆதரிப்பதாகவும்.. உண்ணாவிரத்தை கைவிடுமாறு திராவிட கழக பொதுச் செயலாளர்
கி.வீரமணி எம்.எ., பி.எல்.., அவர்கள் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது ...

17/04/1987 அன்று பலரின் வேண்டுகோளை ஏற்று சாகும் வரை உண்ணாவிரதம் கைவிடப்பட்டது ...
பிறகு தமிழக அமைச்சரைவில் முதன் முதலாக மந்திரி பதவி
எம்.ஆர் .கோவிந்தன் அவர்களுக்கு வழங்கபட்டது... அதன் பிறகு தமிழ்நாடு தேர்வாணைக் குழுவில் முத்தரையர் ஒருவர்க்கு பதவி வழங்கப்பட்டது .....

இந்த கட்டுரை எதற்காக பதியபட்டது என்றால்...

உரிமைகள் என்பது நம் மூச்சு அதை விட்டு கொடுக்கவும் கூடாது ...
அது எப்பொழுதும் தானாக வர கூடியதும் கிடையாது ....அதை நாம் தான் பெற்று கொள்ள வேண்டும் .. அதற்கு நம் பல போராட்டங்களையும், இரத்தங்களையும் கண்ணிர்ரையும் சிந்த வேண்டி வரும் என்பதை நம் முன்னோர்கள் தெளிவாக கூறி உள்ளனர்........
இது நம் உரிமைகளை பெற நம் மக்கள் போராட வேண்டிய நமக்கான நேரம் என்பதை மட்டும் தெரிவித்து கொண்டு .........
நன்றி !!!

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........