30 ஏப்., 2013

1338 முத்தரையர் சதயவிழா

.
All Mutharaiyar's are Welcome .......
All Mutharaiyar's are Welcome .......MANIVANNAN AMBALAKKARAR

முத்தரையர் திருவிழா - மே 23


வணக்கத்திற்க்குறிய உறவுகளே... "பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1338 - வது பிறந்த நாள்" வருகின்ற 23/05/2013 அன்று நமது உறவுகள் உற்சாகமாக கொண்டாட ஆயத்தமாகிவரும் இந்தசூழ்நிலையில் சில விசயங்களை நினைவுபடுத்த வேண்டியது எனது கடமை என்று கருதுகிறேன்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக சில நெருடல்களுடன் பேரரசரின் பிறந்த தினம் கொண்டாடும் நிலை 2011- ம் வருடம் அன்று புதிதாக அமைச்சரான பதவி ஏற்று முதல் அரசு நிகழ்ச்சியாக "பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின்" சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு சென்று சிறிது நேரத்தில் வாகன விபத்தில் மறைந்த மரியாதைக்குறிய மரியம்பிச்சையின் மறைவை அடுத்து அந்த ஆண்டு நம்மால் பேரரசரின் பிறந்த நாளினை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது.

2012 - ம் வருடம் மிகுந்த எதிர்பார்ப்போடு, மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாட எண்ணி இருந்த வேளையில் காவல்துறையின் ஒத்துழைப்பின்றி சில விரும்ப தகாத சம்பவங்கள் நடந்து நமது சமூகப் பெரியவர்கள் சிறைச்சாலை செல்லும் அளவிற்க்கு நம்மை இட்டு சென்றது, இதில் பிறர் மீது நாம் குற்றம் சொல்லும்முன் நம்மிடையே இருக்கும் சில குறைபாடுகளையும் களைய வேண்டியது காலத்தின் கட்டாயம் தன்னுடைய பிறந்த நாள் அன்று தனது வாரிசுகளை காண ஆவலாய் காத்திருக்கும் "பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்" நம்மில் சிலருடைய தகாத செய்கையினால் வருந்துவது ஏற்புடையதன்று, அதனால் இந்த வருடம் நாம் திட்டமிடலுடன் பேரரசரின் பிறந்த நாளினை முன்னெடுக்க வேண்டும்

யாரோ ஒரிரிவர் செய்யும் தவறுகளுக்காக மதிப்புமிக்க நமது தலைவர்கள் சிறை செல்வது நியாயமா? குறைந்தது ஒரு லட்சம் நமது உறவினர்கள் ஒரே இடத்தில் கூடும்பொழுது இயற்க்கையாக நமக்குஉற்சாகம் ஏற்படுவது இயல்புதான் என்றாலும் அது ஏனைய சக மக்களை பாதிக்காமல், அவர்களின்சுதந்திரதிற்க்கு இடைஞ்சல் இல்லாமல் இருக்கும்வரை சரியானதாக இருக்கும். நம்மை கட்டுபடுத்தும்அதிகாரம் உலகில் யாருக்கும் இல்லை ஆதலால் நாமே நமக்கு சில கட்டுபாடுகளை விதித்துக்கொள்வது, நமது பேரரசர் எத்தனை ஆசைகளோடு நம்மை வரவேற்க காத்திருக்கின்றாரோ அதற்க்குவிரோதம் இல்லாமல், யாருக்கும் தொந்தரவாக இல்லாமல் மகிழ்ச்சியோடு இந்த விழாவினை நடத்த சில கட்டுபாடுகளை நாம் கடைபிடிக்க வேண்டும்.

1) ஒழுக்கம் என்பதை உலகிற்க்கே சொல்லி தந்தவர்கள் "முத்தரையர்கள்" பின் நாம் மட்டும் எப்படி அதனை மீற முடியும் ? ஆகவே தலையில் ரிப்பன் கட்டி வருவது, விசில் அடிப்பது, ஆபாசமான (அ) வன்முறையான கோசங்கள் எழுப்புவது போன்றவற்றினை முழுவதுமாக தவிர்க்க வேண்டும். கவனமாக இருக்க வேண்டும் சமூக விரோதிகள் நமது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த நம்முடனே வந்து இந்த செயல்களை செய்ய முற்படலாம், அவர்களை கண்காணிக்க வேண்டியதும் நமது கடமை

2) போக்குவரத்தினை ஒழுங்குபடுத்த காவல்துறை கடந்த வருடம் போல தவறுமேயானால், நமது இளைஞர்களே அந்த பணியினை ஏற்றிட வேண்டும். இதற்க்காக திருச்சி மாநகரை வசிப்பிடமாக கொண்ட நமது இளைஞர்களை கொண்டு "ஒழுங்கு பாதுகாப்பு படை" அமைக்கப்பட வேண்டும், இதில் இனத்தின் மீது பற்று கொண்ட எல்லா நமது சமூக அமைப்பில் இருப்பவர்களும் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும், பிறந்த நாள் அன்று வேறு பொதுகூட்டங்கள் அல்லது பேரணி நடத்தும் சங்கங்கள் "இளைஞர் படை" அமைப்பது கட்டாயம், அது நமக்கு எதிர்காலங்களில் வரும் இன்னல்களை தவிர்க்க உதவும்.

3) பிரதானமானது "மது போதையில்" வருபவர்களை அது யாராக இருந்தாலும் அனுமதிக்கக்கூடாது, இன்றைய தமிழகத்தின் மிகப் பெரிய சாபகேடாக உள்ள மதுவை அருந்தி நாம் கடவுளாகவே கருதும் பெரும்பிடுகு முத்தரையரின் அருகில் வருவதை உண்மையான எந்த முத்தரையனும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், இதனை நிச்சயமான இளைஞர்கள் கண்காணிக்க வேண்டும், மன்னரின் புகழுக்கும், நமது குலப் பெருமைக்கும் களங்கம் ஏற்படுத்தும் எந்த செயலையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

4) மரியாதை செலுத்த செல்லும்போது கும்பலாக இல்லாமல் தனி தனி நபர்களாக வரிசையில் சென்று மரியாதை செலுத்துவது அவசியம், இதற்க்கு சற்று பொறுமை வேண்டும். இதனை பார்க்கக் கூடிய பிற சமூகத்தவர் நிச்சயமாக நம்மைக் குறித்து பெருமிதமாகவே நினைத்துக் கொள்வார்கள்,

இந்த கட்டுபாடுகளையும், விதிமுறைகளையும் நமக்கு நாமே விதித்துக் கொள்வதன் மூலம் தேவையற்ற அவபெயரினையும் தவிர்த்திடவும், நம் குலப் பெருமையை காத்திடவும் முடியும், இந்த விதிமுறைகள் கடைபிடிக்க முடியாத அளவிற்க்கு ஒன்றும் கடினமானது இல்லை. நாம் கூடி இருக்கும் இடங்களில் கூச்சல் இடுவது நம்து வீரத்திற்க்கு இழுக்கு...! சிங்கத்தை சின்னமாக கொண்ட நாம் சிறுபிள்ளை தனமான காரியங்கள் செய்தல் ஆகாது...!!! இன்று மட்டுமல்ல என்றும் நாம் கொண்டாடும் ஒரு நாள் மே- 23 ஆகவே இந்த நாள் நாம் பெருமைபட வேண்டிய நாளே தவிர, யார் மனதையும் புண்படுத்தும் நாள் அல்ல...!!!

இந்த விசயங்கள் என் இனத்தை சிறுமை படுத்த எழுதவில்லை....!! என் இனம் தலை நிமிர்ந்து எம் மன்னவனைப் போல நிற்க வேண்டி எழுதப்பட்டது. வேறு யாரோ செய்கிறார்கள் என்பதற்க்காக நமது குலப்பெருமையை விட்டுக்கொடுக்க முடியாது என்பது எனது உறவுகள் அறியாதது இல்லை ஆனாலும் ஞாபகப்படுத்த வேண்டியது எனது கடமை.

பேரரசரின் புகழ் பாட மே- 23 ல் திருச்சியில் திரளுங்கள்,

திசைகள் அதிர...!

அரசியல் பழக...!!

அகிலமும் நோக்க...!!!

அணி அணியாய்...! அமைதியின் வடிவாய்...!!!

திரளுங்கள் திருச்சியில்.....

உங்களில் ஒருவனாய்... மன்னரின் புகழ்பாடி நிறைவு செய்யும்

உங்கள் சஞ்சய்காந்தி அம்பலகாரர்,
ஒருங்கிணைப்பாளர்,
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்.

http://illamsingam.blogspot.ae/2013/04/23.html


MANIVANNAN AMBALAKKARAR

29 ஏப்., 2013

வன்னியர்களுக்கு முத்தரையர் பட்டம் என்றால் நாம் யார்?

MANIVANNAN AMBALAKKARAR


என் இன சொந்தங்களே விழிப்புடன் இருப்பீர் முத்தரையர் ராஜா வம்சத்திற்கு வன்னியர்கள் உரிமை கொண்டாட ஆரம்பித்து விட்டனர்
இதை வன்மையாக வன்னிய இனத்தை கண்டிக்கிறோம் மற்றும் எச்சரிக்கை விடுக்கிறோம் எமது பட்ட பெயரை பயன் படுத்தாதே எமது அமைதியை சோதிக்காதே ................
எனது செல்  எண் 9787632386

23 ஏப்., 2013

வன்மையாக கண்டிக்கிறோம் !


ஆலங்குடி வெங்கடாசலம்,வழக்கறிஞர் கண்ணன் புதுகோட்டை ,இவர்களின் படுகொலை தொடர்ந்து தஞ்சாவூர் ரெட்டிபாளையத்தை சேர்ந்த கே.ராமமூர்த்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார் அந்நிய சாதிகள் நம் சாதிகளை தாக்குவது நம்மை அளிப்பதற்கு வழிவகை செய்கிறது .எனவே  வன்மையாக கண்டிக்கிறோம்.

இப்படிக்கு

உலக முத்தரையர் சங்கம் அண்ட் வீர  முத்தரையர் வழக்கறிஞர் பிரிவு அண்ட் தமிழ்நாடு முத்தரையர் சங்கம்,தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம்,முத்தரையர் இளைஞர் அணி

வன்மையாக கண்டிக்கிறோம் !


வன்மையாக கண்டிக்கிறோம் !

MANIVANNAN AMBALAKKARAR

8 ஏப்., 2013

MUTHARAIYAR VASANANGAL

Paseyodu vanthal soru poduvom.....  
 Veriyodu vanthal kooru poduvom......
Maranam kooda anjum maravan nadandhal....          
Theruve kalai kattum kallar nadandhal....                  
 Agilame adhirum agamudayar ponal...
Emanum pinvanguvan emadhu kula VeeRa MUTHARAIYARgal endral....
Ennada parvai..
Nangadhanda Searvai...
@Padaithavan Aandavanalum avanaum aatti padaippavan Ambalakkaran@Agilathil padhi..
Ambalakkarar saadhi..@singathai konjinavanum illai..
 Ambalakkarari minjinavanum illai..@adupavargal adattum..
Ambalakkarar mattum aalattum..@andavanai kandavanum illai.
 ambalakkararai vendravarum illai..

INTHA VASANANGALAI ELUTHIYAVAR

 G.Suresh ambalalakkarar
9944301862
thanjai rettipalayam 

6 ஏப்., 2013

may23 mutharaiyar sathaya vizha

1338 mutharaiyar sathaya vizha


..
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மன்னரின் 1338 வது சதய விழா வருகின்ற (மே 23 ) அன்று திருச்சியில் மாநில தலைவர் அய்யா R.V அவர்கள் தலைமையிலும், மாநில இளைஞரணி தலைவர் இளம்சிங்கம் அண்ணன் R.V. பரதன் முன்னிலைலும் கோலாகலமாக நடைபெற இருக்கிறது .. தமிழகத்தில் உள்ள அனைத்து முத்தரையர் இன சிங்ககளும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளபடுகிறார்கள் .......

போட்டோ உதவி : பிரகாஷ் முத்தரையர் (நாமக்கல் மாவட்ட   இளைஞரணி  துணை தலைவர் (அமைப்பளர் )) ...

பொது சொத்து சேத வழக்கு முத்தரையர் சங்க தலைவர் 55 பேர் கோர்ட்டில் ஆஜர் 17ம் தேதி மீண்டும் விசாரணை

பொதுச் சொத்துகளை சேதப்படுத்திய வழக்கு தொடர் பாக முத்தரையர் சங்கத்தலைவர் உள்பட 56 பேர் திருச்சி கோர்ட்டில் நேற்று ஆஜராகினர்.
பெரும்பிடுகு முத்தரையர் சதயவிழா கடந் தாண்டு மே 23ம் தேதி திருச்சியில் நடந்தது. அப் போது தமிழ்நாடு முத்தரையர் சங்கம் சார்பில் திருச்சி ஒத்தக்கடை பகுதியில் உள்ள முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அப்போது நடந்த பேர ணியில் பொதுமக்களு டன் மோதல் ஏற்பட்டதில் முத்தரையர் சங்கத்தினர் பொதுச் சொத் துகளை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து முத்தரையர் சங்கத்தலைவர் விஸ்வநாதன், அவரது மகன் ராம்பிரபு உள் ளிட்ட 57 பேர் மீது காந்தி மார்க்கெட் போலீ சார் வழக்குப்பதிவு செய்தனர். பொதுச் சொத்துகளை சேதப்படுத்துதல், அரசு ஊழியர்களை பணிசெய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிந்து அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் அனைவரும் வெளியே வந்தனர். 
இது தொடர்பான வழக்கு விசாரணை திருச்சி மாவட்ட 5வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை கடந்த 1ம் தேதி வந்த போது வழக்கு விசாரணையை 2வது கூடுதல் உதவி அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து 3ம் தேதி அனை வரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். 
இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை நேற்று வந்தது. ராம்பிரபு தவிர, விஸ்வநாதன் உள்பட 56 பேர் நீதிபதி ஜெயராஜ் முன் ஆஜராகினர். ராம்பிரபு சார்பில் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்டு மனு அளிக்கப்பட் டது. விசாரித்த நீதி பதி, வழக்கு விசார ணை யை வரும் 17ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

தமிழ்நாடு முத்தரையர் சங்கம் நடத்திய முக்கிய போராட்டம் : (தமிழ்நாடு முத்தரையர் சமூக சங்க 100 ஆண்டு வரலாறு என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டது )



15/04/1987 ல் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் முத்தரையர் சங்கம் நடத்திய முக்கிய போராட்டம் ஆகும் ...இது மாண்புமிகு முதலவர் எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்கள் ஆட்சியில் நடைபெற்றது ..

உண்ணாவிரதிற்கான கோரிக்கைகள் :
1...தமிழக மந்திரி சபையில் முத்தரையர்க்கு பிரதி நிதித்துவம் கோருதல் ...
2...தமிழ்நாடு தேர்வாணைக் குழுவில் முத்தரையர் ஒருவரை நியமனம் செய்தல் ..
3...தமிழகத்தில் ஜாதி வாரி மக்கள் தொகையை கணக்கெடுத்தல் ...
4...மக்கள் தொகை அடிப்படையில் கல்வி வேலைவாய்ப்பில் அதிக இட ஒதிக்கீடு போன்ற முக்கியமான பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு முத்தரையர் சங்க தலைவர் டாக்டர் .திரு எம்.வேங்கடசாமி தலைமையில் முத்தரையர் சங்கத்தினர் சென்னை மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை அருகில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர்.
இதற்க்கு பல அமைப்புக்கள் ஆதரவு தெரிவித்தது ... இதற்க்கு வன்னியர் சங்க மாநில தலைவர் திரு. சா.சுப்பிரமணியம் ஐ.ஏ.ஏஸ் (ஒய்வு ) அவர்கள் முத்தரையர் சங்க தலைவரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் ...,மற்றும் இந்த நியாமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமாறு தமிழக அரசை கேட்டுக்கொண்டார் ..

அரசு பணிகளில் இடஒதிக்கீடு சதவீதப் போரில் சரித்திரம் படைப்போம் !
ஓடுகக்பட்டோருக்கு தோல் கொடுப்போம் !!
ஓரவஞ்சனை செய்வோரை துரத்தியடிப்போம் !!
வெல்லட்டும் நமது விவேகங்கள் !!! என்று முழங்கி போராட்டம் வெற்றி கரமாக நடைபெற்றது ...

தங்களது நியாமான கோரிக்கைகளை தாங்கள் ஆதரிப்பதாகவும்.. உண்ணாவிரத்தை கைவிடுமாறு திராவிட கழக பொதுச் செயலாளர்
கி.வீரமணி எம்.எ., பி.எல்.., அவர்கள் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது ...

17/04/1987 அன்று பலரின் வேண்டுகோளை ஏற்று சாகும் வரை உண்ணாவிரதம் கைவிடப்பட்டது ...
பிறகு தமிழக அமைச்சரைவில் முதன் முதலாக மந்திரி பதவி
எம்.ஆர் .கோவிந்தன் அவர்களுக்கு வழங்கபட்டது... அதன் பிறகு தமிழ்நாடு தேர்வாணைக் குழுவில் முத்தரையர் ஒருவர்க்கு பதவி வழங்கப்பட்டது .....

இந்த கட்டுரை எதற்காக பதியபட்டது என்றால்...

உரிமைகள் என்பது நம் மூச்சு அதை விட்டு கொடுக்கவும் கூடாது ...
அது எப்பொழுதும் தானாக வர கூடியதும் கிடையாது ....அதை நாம் தான் பெற்று கொள்ள வேண்டும் .. அதற்கு நம் பல போராட்டங்களையும், இரத்தங்களையும் கண்ணிர்ரையும் சிந்த வேண்டி வரும் என்பதை நம் முன்னோர்கள் தெளிவாக கூறி உள்ளனர்........
இது நம் உரிமைகளை பெற நம் மக்கள் போராட வேண்டிய நமக்கான நேரம் என்பதை மட்டும் தெரிவித்து கொண்டு .........
நன்றி !!!

கனவு காதல்

நிலைப்பதில்லை  என்றும்  தெரிந்தும்  அவள்  நினைவலைகள்  தொடருகிறது.  கனவாக... .. .. அவள்  தோழியிடம் கூறி எடுத்துவிட்டால் புகைப்படம் என்  நினைவ...