2 மார்., 2013

புதிய அமைச்சர் பூனாட்சி வாழ்க்கை குறிப்பு


அமைச்சர் பூனாட்சி
அமைச்சர் பூனாட்சி
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. டி.பி.பூனாட்சி, காதி மற்றும் ஊரக தொழில்கள் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு வயது 61 ஆகிறது. இவர் கடந்த 1972–ம் ஆண்டு முதல் அ.தி.மு.க.வில் சேர்ந்து முசிறி கிளை கழக செயலாளர், ஒன்றிய பொருளாளர், செயலாளர் உள்பட பல்வேறு பொறுப்புகளில் வகித்துள்ளார். தற்போது மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளராக பொறுப்பில் உள்ளார். இவர் கடந்த 1996–ம் ஆண்டு முதல் 2006–ம் ஆண்டு வரை தொடர்ந்து முசிறி ஒன்றிய கவுன்சிலராக பதவி வகித்துள்ளார். முத்தரையர் சமுதாயத்தை சேர்ந்தவர்.

கடந்த 2006–ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முசிறி தொகுதியில் (தற்போது மண்ணச்சநல்லூர் தொகுதியாக மாற்றப்பட்டுள்ளது) தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்வராஜை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன்பின்னர் 2011–ம் ஆண்டில் மண்ணச்சநல்லூர் தொகுதியில் போட்டியில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்வராஜை தோற்கடித்து வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். இவருக்கு பாலம்பாள் என்ற மனைவியும், பிரபாகர், அருண்குமார் என்ற 2 மகன்களும், ஜெயந்தி என்ற மகளும் உள்ளனர். இவர்களில் பிரபாகருக்கு மட்டும் திருமணமாகி உள்ளது.


கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........