15 மார்., 2013

இலங்கைக்கு எதிர்ப்பு: ஜெனிவாவில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்



இலங்கைக்கு எதிர்ப்பு: ஜெனிவாவில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்
பதிவு செய்த நாள் -
மார்ச் 06, 2013  at   7:44:56 AM
 
இலங்கையின் போர்க்குற்றம் குறித்து ஐ.நா. சபை சுதந்திரமான விசாரணையை மேற்கொள்ள வலியுறுத்தி ஜெனிவாவில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெனிவா ரயில் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்திருந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக இலங்கை அரசைக் கண்டித்து பேரணியும் நடைபெற்றது. இதில், கனடாவின் சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜிம் கரியானஸ், பாரீஸ் மாநகர சபை உறுப்பினர்கள் உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் கலந்துகொண்டனர்.
இந்த பேரணியில் ராஜபக்சவுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது. இதில், கலந்துகொண்டவர்களில் பலர் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்ட புகைப்படம் அடங்கிய பதாகைகளை ஏந்தி வந்திருந்தனர். இந்த புகைப்படத்தை சமீபத்தில் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டிருந்தது.
சுரேஸ் பிரேமச்சந்திரன்-சிறப்புப் பேட்டி: போர்க்குற்றம் தொடர்பாக இலங்கை அரசு மீது ஐ.நா. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக புதிய தலைமுறைக்கு அவர் அளித்த சிறப்புப்பேட்டியில்: இலங்கை அரசின் இன அழிப்பக் கொள்கையை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக்காட்டும் ஆர்ப்பாட்டம் இது. இலங்கைக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டமும் நடந்து வருகிறது. இலங்கைக்கு எதிராக தீர்மானத்தை கொண்டு வர அமெரிக்கா முயற்சித்து வந்தாலும், அது முழுமையானதாக இருக்குமா என்பதில் ஒரு கேள்விக்குறி இருக்கிறது. இந்தியா ஒரு முன்முயற்சி எடுத்தால் இலங்கைக்கு எதிராக வலுவான தீர்மானம் கொண்டு வர வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
"நிலையில் மாற்றமில்லை": கனடா போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், கொழும்புவில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் கனடா கலந்துகொள்ளாது என ஏற்கனவே அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது என்று கனடாவின் கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி.,யான பிராட் பட் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........