மனிதனாக பிறந்ததில் மகிழ்ச்சி துளியும் இல்லை…முத்தரையனாக பிறந்ததற்கு இணை வேறு எதுவும் இல்லை

வரலாறு

நம் குல பெருமைகளை அறிந்து போற்றிப் பாதுகாக்க வேண்டும் அவர்கள் வழிவந்த நம் பரம்பரையினரின் நீங்காக் கடமையும் உரிமையும் ஆகும்.
நான் உலக வரலாற்றையோ, நாட்டு வரலாற்றையோ எழுதப்புகவில்லை. எனது இனத்தையும், குலத்தையும் நான் அறிந்த, என் அறிவிக்குப் புலனாகும் வரலாற்றை தொகுத்துள்ளேன்.
இது பலருக்கு கனிச்சாராய் இனிக்கலாம். சிலருக்கு எட்டிக்காயாய்க் கசக்கலாம். ஆனால் எனக்கு உண்மையன எம் இன வரலாற்றை எழுதுவதொன்றே நோக்கம்.
போற்றுவோர் போற்றட்டும். புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும். தொடர்ந்து செல்வேன்.
வரலாறு என்பது கற்பனையாய் புனையும் கவிதையோ கதையோ இல்லை.
புதினமோ புராணமோ இல்லை.அது ஒரு புகைப்படமோ, ஓவியமோ இல்லை.வரலாற்றில் கற்பனைக்கோ, உயர்வு நவிற்சிக்கோ இடமில்லை.
இது கடந்த கால உண்மை நிகழ்வுகளின் பதிவேடு. உண்மை சம்பவங்களின் வரைபடம்.
ஒரு இனமும், சமுதாயமும், நாடும் முன்னேற அவை தங்களுடைய கடந்த கால வரலாற்றை தெளிவாக அறிந்திருக்கவேண்டும்.
தன்னை அறியாதவன், தன் இனத்தை உணராதவன், தன் சமூகசிந்தனை அற்றவன், தன் கடந்த கால வ்ரலாற்றை தெரியாதவன் ஜடமாகி, பிணமாகி பின் மண்னாகிறான்.
நாம் நம் முன்னோர்களின் ஆவணக்களை பாதுகாக்க மறந்ததினால் மற்றவர்கள் உரிமை கொண்டாட ஆரமிதுவிட்டனர்
இனியாது பாதுகாப்போம் என்ற கடமையுடன் ………
முத்தரைய குல நாகரீகத்தையும், பண்பாட்டையும், வளர்ச்சியையும் விளக்கும் வகையில் தெளிவாக உணர்ந்து மறைந்து போன அல்லது மறைக்கப்பட்ட பழைய வரலாற்றுச் சுவடுகளை நம் இளைய தலைமுறையினர் அறிய வழி செய்திடல் வேண்டும்.
அன்பும், கருனையும், பரிவும், பற்றும், பணிவும், வீரமும், விவேகமும் எம் குல சொத்து. இளைய தலைமுறையினர் இவை அறிந்து ஆர்வத்துடன் செயல்படின் வரலாற்றில் தடம் பதித்த எமது இனம் மீண்டும் காலத்தையும் வென்று நிற்க்கும் என்பதில் ஐயமில்லை.
நேற்று தோன்றிய கட்சிகள் சங்கங்கள சாதியை வைத்து காரியங்கள் சாதிப்பது அனைவரும் அறிந்ததே இந்நேரத்தில் நம் இனத்திற்குள் ஒற்றுமை அவசியமான ஒன்று…
இணையத்தில் நம் உறவுகளுக்கு நம்மாலான ஏதேனும் ஒரு தகவல் தெரிவிப்போம் உபயோகமாக …
ஒன்றுபடுவோம் .. வெல்வோம்…..
மனிதனாக பிறந்ததில் மகிழ்ச்சி துளியும் இல்லை…முத்தரையனாக பிறந்ததற்கு இணை வேறு எதுவும் இல்லை …சிதறி கிடக்கும் என் சொந்தங்களே அணி திரள்வீர் இன மானம் காக்க….
என்றும் அன்புடன் ….

உலக முத்தரையர் சங்கம்

முத்தரையர்கள் முன்னேற்றம் அடையாததற்கு காரணம் ?

14 மார்., 2013

மதுரை கோட்டையில் இலங்கை தமிழர்க்காக புரட்சி

.
மாபெரும் மாணவர் புரட்சி ! மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் அதிரடி ! 

மதுரை தலைமை தபால் நிலையத்தை இழுத்து மூடிய மாணவர்கள். ஹிந்தி எழுத்துக்களை மாணவர்கள் அடித்து நொறுக்கினர் . காங்கிரஸ் கட்சி கொடி கம்பத்தில் இருந்து இறக்கி கிழிக்கப் பட்டது. இலங்கை கொடி எரிக்கப்பட்டது. 

இன்று 14.3.13 காலை இனபடுகொலைக்கு எதிரான மதுரை அனைத்து கல்லூரி மாணவர்கள் பேரவை சார்பாக காலை பத்து மணிக்கு மாவட்ட நீதி மன்றத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை ஒரு கண்டன பேரணி மாணவர்கள் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது இதில் பல கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் மற்றும் மாணவிகள் (குறிப்பாக மதுரை சட்ட கல்லூரி) கலந்து கொண்டு கட்டுக்கு அடங்காமால் கொதித்து சென்று கொண்டு இருந்தனர் அவர்களை கட்டு படுத்த முடியாது தோழர்களும் காவலர்களும் திணறினோம் பேரணி தல்லாகுலம் வந்த பொது அங்கு இருந்த காங்கிரஸ் அலுவலக கோடியை கம்பத்தில் ஏறி எடுத்து கிழித்து எறிந்தனர்.

அதை அடுத்து பேரணி மதுரை தந்தி அலுவலகம் வந்த போது சட்ட கல்லூரி மாணவர்கள் மட்டும் தனியாக ஒரு பதினைத்து பேர் காவல்துறையின் கவனத்தை திசை திருப்பி விட்டு தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகை இட்டு அங்கு இருந்தோரை வெளியேற்றி கதவை (கிரில் கதவு) உள் பக்கம் பூட்டு போட்டு பூட்டி கொண்டனர் 

பின்னர் ..மொட்டை மாடிக்கு சென்று தலைமை தபால் அலுவலகம் எற்ற ஹிந்தி வார்த்தையை பிளாஸ்டிக் குழாய் கொண்டு அடித்து உடைத்தனர் பக்க சுவரில் நின்று கொண்டு கோசங்களை சொல்லியபடி பேரணி பதாகை தொங்க விட்டனர் விரைந்து வந்த காவல் துறையினர் ஒன்றும் செய்ய முடியாது திகைத்தனர். தீயணைப்பு துறை மற்றும் உதவி காவல் ஆணையர் மற்றும் மருத்துவ குழு சுற்றி கொண்டே இருந்தனர்.

வெகு நேரம் கழித்து பேரணி முடிந்தது அதில் கடைசியாக இலங்கை கொடி எரிக்க பட்டது. ராஜபக்சேவின் உருவ பொம்மை ஏற்பாடு செய்து கொண்டு செல்லும் வழியில் காவல் துறை எப்படியோ கண்டு பிடித்து பிடிங்கி எச்சரித்து அனுப்பினர்..பின்னர் வழக்கறிஞர் சங்க செயலர் ஏ.கே.ஆர் வந்து பேசி மாவட்ட ஆட்சியரை வர சொல்லி பேச வைத்தார் .மாணவர்கள் தங்களின் பதினைத்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி முதல்வர் அலுவலகத்துக்கு தெரிவிக்க சொன்னார்கள். மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார் .

கருத்துரையிடுக

Windows Live Messenger + Facebook