மனிதனாக பிறந்ததில் மகிழ்ச்சி துளியும் இல்லை…முத்தரையனாக பிறந்ததற்கு இணை வேறு எதுவும் இல்லை

வரலாறு

நம் குல பெருமைகளை அறிந்து போற்றிப் பாதுகாக்க வேண்டும் அவர்கள் வழிவந்த நம் பரம்பரையினரின் நீங்காக் கடமையும் உரிமையும் ஆகும்.
நான் உலக வரலாற்றையோ, நாட்டு வரலாற்றையோ எழுதப்புகவில்லை. எனது இனத்தையும், குலத்தையும் நான் அறிந்த, என் அறிவிக்குப் புலனாகும் வரலாற்றை தொகுத்துள்ளேன்.
இது பலருக்கு கனிச்சாராய் இனிக்கலாம். சிலருக்கு எட்டிக்காயாய்க் கசக்கலாம். ஆனால் எனக்கு உண்மையன எம் இன வரலாற்றை எழுதுவதொன்றே நோக்கம்.
போற்றுவோர் போற்றட்டும். புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும். தொடர்ந்து செல்வேன்.
வரலாறு என்பது கற்பனையாய் புனையும் கவிதையோ கதையோ இல்லை.
புதினமோ புராணமோ இல்லை.அது ஒரு புகைப்படமோ, ஓவியமோ இல்லை.வரலாற்றில் கற்பனைக்கோ, உயர்வு நவிற்சிக்கோ இடமில்லை.
இது கடந்த கால உண்மை நிகழ்வுகளின் பதிவேடு. உண்மை சம்பவங்களின் வரைபடம்.
ஒரு இனமும், சமுதாயமும், நாடும் முன்னேற அவை தங்களுடைய கடந்த கால வரலாற்றை தெளிவாக அறிந்திருக்கவேண்டும்.
தன்னை அறியாதவன், தன் இனத்தை உணராதவன், தன் சமூகசிந்தனை அற்றவன், தன் கடந்த கால வ்ரலாற்றை தெரியாதவன் ஜடமாகி, பிணமாகி பின் மண்னாகிறான்.
நாம் நம் முன்னோர்களின் ஆவணக்களை பாதுகாக்க மறந்ததினால் மற்றவர்கள் உரிமை கொண்டாட ஆரமிதுவிட்டனர்
இனியாது பாதுகாப்போம் என்ற கடமையுடன் ………
முத்தரைய குல நாகரீகத்தையும், பண்பாட்டையும், வளர்ச்சியையும் விளக்கும் வகையில் தெளிவாக உணர்ந்து மறைந்து போன அல்லது மறைக்கப்பட்ட பழைய வரலாற்றுச் சுவடுகளை நம் இளைய தலைமுறையினர் அறிய வழி செய்திடல் வேண்டும்.
அன்பும், கருனையும், பரிவும், பற்றும், பணிவும், வீரமும், விவேகமும் எம் குல சொத்து. இளைய தலைமுறையினர் இவை அறிந்து ஆர்வத்துடன் செயல்படின் வரலாற்றில் தடம் பதித்த எமது இனம் மீண்டும் காலத்தையும் வென்று நிற்க்கும் என்பதில் ஐயமில்லை.
நேற்று தோன்றிய கட்சிகள் சங்கங்கள சாதியை வைத்து காரியங்கள் சாதிப்பது அனைவரும் அறிந்ததே இந்நேரத்தில் நம் இனத்திற்குள் ஒற்றுமை அவசியமான ஒன்று…
இணையத்தில் நம் உறவுகளுக்கு நம்மாலான ஏதேனும் ஒரு தகவல் தெரிவிப்போம் உபயோகமாக …
ஒன்றுபடுவோம் .. வெல்வோம்…..
மனிதனாக பிறந்ததில் மகிழ்ச்சி துளியும் இல்லை…முத்தரையனாக பிறந்ததற்கு இணை வேறு எதுவும் இல்லை …சிதறி கிடக்கும் என் சொந்தங்களே அணி திரள்வீர் இன மானம் காக்க….
என்றும் அன்புடன் ….

உலக முத்தரையர் சங்கம்

முத்தரையர்கள் முன்னேற்றம் அடையாததற்கு காரணம் ?

5 மார்., 2013

தமிழீழ விடுதலையை விரைவாக்க முயல்வோம்
நண்பர்களே தயவுசெய்து இதை நீங்கள் ஏற்றுக்கொண்டால் உங்களது நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்,இல்லாவிட்டால் குறைந்தபட்சம் like பண்ணுங்கள்.

என் அன்புள்ள நண்பர்களே !!
facebook மூலம் நாம் தகவல்களைப் பரப்புவதால் தமிழீழ விடுதலையை விரைவாக்க முயல்வோம்,குறிப்பாக நீங்கள் ஒவ்வொருவரும் தமிழ்ப்பற்றுள்ள,தமிழீழத்தில் பற்றுள்ள,தமிழ் மக்களில் பற்றுள்ள,தலைவருக்கு உண்மையான அவர் மீது நம்பிக்கையுள்ள பாசம் உள்ள,மாவீரர்களது இலட்சியத்திலே உறுதியுள்ள,குறிப்பாக மனச்சாட்சியுடைய நண்பர்கள் குறைந்தபட்சம் 100 பேருக்கு உண்மையான தகவல்களை பகிர்ந்துகொள்ளுங்கள் ,வேற்றின நண்பர்கள் என்றாலும் நன்மையே,அவர்கள் நீங்கள் பகிர்ந்துகொள்ளும் படங்கள் மூலமாகவாயினும் எம் வரலாற்றினை அறிந்துகொள்வார்கள்,
முக்கியமான ஒவ்வோருநாட்டு அரசியல் தலைவர்களுடைய facebook பக்கத்தை like செய்வதன் மூலம் குறைந்த பட்சம் உங்களது profile picture மூலமாவது உங்களது உணர்வைப் புரிந்துகொள்வார்கள் என்பது எனது சிறு நம்பிக்கை,
இதன்மூலம் நாம் அனைத்துச் செயற்பாடுகளையும் முழு மூச்சாகவும் விரைவாகவும் முன்னெடுக்க முடியும்,இலங்கை அரசு 2009 க்கு முன்னரும்,தற்போதும் தமிழீழத்திலே மேற்கொண்டு வரும் இன அழிப்பு நடவெடிக்கைகளை பகிர்வதோடு,புலம்பெயர் தேசத்திலே நடைபெறும் நிகழ்வுகளையும் உங்களுடைய நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதால்100 பேர் பங்கெடுக்கும் ஒரு நிகழ்வை 10 மடங்காக்கி 1000 பேராக அதிகரித்து அந்தநாட்டு அரசினதும் மக்களினதும் கவனத்தை எமது பக்கம் திருப்பி,எமது பிரச்சனைகளை அவர்களிடம் சென்றடையச்செய்வதன் மூலம் எம் நாட்டுக்கான எமது கடமைகளிலே ஒரு சிறு பகுதியையாவது நிறைவேற்றலாம்.எமது மாவீரர்களது உயிர்த்தியாகங்களும் மக்களது தியாகங்களும்,கனவுகளும்,
தலைவரது கொள்கையும் பொய்த்துப்போகவோ தோற்றுப்போகவோ ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என உறுதி எடுத்துக்கொள்வோம்.. எமது அப்பு,ஆச்சி என பரம்பரை பரம்பரையாக நாம் ஆண்டுவந்த எங்கள் மண்ணிலே விதைக்கப்பட்ட எமது மாவீரர்களதும்,மக்களதும் விதைகளிலிருந்து முளைவிட்டு உயிர்பெற்றெழுந்து உணர்வுள்ள தலைவனின் பிள்ளைகளாக தமிழீழமண்ணில் சரித்திரம் படைப்போம்.....
கருத்துரையிடுக