2 மார்., 2013

முத்தரையர் குலச் சிற்றரசன் பங்கேற்ற போர்




காந்தளூர் வள்ளுவ நாட்டில் அமைந்திருப்பதும் நாடுவாழிகளின் தலைவரான வள்ளுவ நாடாழ்வான் மேற்குறித்த போட்டிகளுக்கு நடுவராக இருந்த நிகழ்வும் தற்செயலான நிகழ்வுகள் அல்ல என நாம் புரிந்துகொள்ள இயலும். காந்தளூர்ச்சாலையில் பயிற்சி பெற்றோர் பிராம்மண வர்ணத்தவராக அன்றி, க்ஷத்திரிய வர்ணத்தவராகவே, அதாவது அரச குலத்தவராகவே இருந்திருக்க வேண்டும் என்பதற்கு ஒரு மறைமுகமான குறிப்பு கி.பி. 8ஆம் நூற்றாண்டுக்குரிய முத்தரையர் குலச் சிற்றரசன் சுவரன் மாறனின் செந்தலை (சந்திர லேகைச் சதுர்வேதி மங்கலம்) பாடல் கல்வெட்டில் உள்ளது.

—வண்டரவம் கார்தோற்றும் காந்தளூர்
மண் தோற்ற வேந்தர் மனம்


“வண்டுகளுடைய ரீங்காரம் மேகத்தின் முழக்கம்போல ஒலிக்கின்ற காந்தளூரின் நில உரிமையைப் பறிகொடுத்த வேந்தர்களின் மனம்” என்பது இதன் பொருளாகும். காந்தளூர்ச் சாலை என்பது வேந்தர் குலத்துக்குரியதே என்ற பொருளை இது மறைமுகமாகக் குறிப்பதாகத் தெரிகிறது.10 இது பாண்டியர் – சேரர் கூட்டணியை எதிர்த்துப் பல்லவர்கள் சார்பாக முத்தரையர் குலச் சிற்றரசன் பங்கேற்ற போர் குறித்த பாடல் ஆகும்.

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........