2 மார்., 2013

சட்டப்பிரிவு 66 A என்ன சொல்கிறது?


யாரேனும் ஒருவர் கணிணி சாதனத்தைப் பயன்படுத்தியோ அல்லது தொலைத்தொடர்பு சாதனத்தை பயன்படுத்தியோ :
விகல்பமான முறையிலோ (ஒருவருடைய மனதுக்கு வருத்தத்தை ஏற்படுத்தக்கூடிய முறையில்)
அல்லது பயமுறுத்தலை விளைவிக்கும் முறையிலோ தகவல்களை அனுப்பினாலோ;
அல்லது தவறு என்று தெரிந்தும் ஒரு தகவலை தொல்லை செய்யும் விதமாகவோ;
அசவுகரியத்தை ஏற்படுத்தும் விதமாகவோ;
அபாயம் ஏற்படுத்தும் விதமாகவோ;
தடங்கல் ஏற்படுத்தும் விதமாகவோ;
அவதூறு செய்யும் விதமாகவோ;
ஊறு விளைவிக்கும் விதமாகவோ;
பயமுறுத்தும் விதமாகவோ;
பகைமை விளைவிக்கும் விதமாகவோ;
வெறுப்பை தோற்றுவிக்கும் விதமாகவோ;
அல்லது கெட்ட நோக்கத்துடனோ மற்றவருக்கு அனுப்பினாலோ;
அல்லது யாரேனும் ஒருவருக்கு தொந்தரவு தரும் விதத்தில்
அல்லது அசவுகரியத்தை விளைவிக்கும் விதத்தில் அல்லது தகவல் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்று தெரியாத விதத்தில் (ஏமாற்றும் நோக்கில்)
அல்லது திசை திருப்பும் விதத்தில் தகவல்களை அனுப்பினாலோ அவருக்கு (தகவலை அனுப்பியவருக்கு)மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்று அபராதம் விதிக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........