மனிதனாக பிறந்ததில் மகிழ்ச்சி துளியும் இல்லை…முத்தரையனாக பிறந்ததற்கு இணை வேறு எதுவும் இல்லை

வரலாறு

நம் குல பெருமைகளை அறிந்து போற்றிப் பாதுகாக்க வேண்டும் அவர்கள் வழிவந்த நம் பரம்பரையினரின் நீங்காக் கடமையும் உரிமையும் ஆகும்.
நான் உலக வரலாற்றையோ, நாட்டு வரலாற்றையோ எழுதப்புகவில்லை. எனது இனத்தையும், குலத்தையும் நான் அறிந்த, என் அறிவிக்குப் புலனாகும் வரலாற்றை தொகுத்துள்ளேன்.
இது பலருக்கு கனிச்சாராய் இனிக்கலாம். சிலருக்கு எட்டிக்காயாய்க் கசக்கலாம். ஆனால் எனக்கு உண்மையன எம் இன வரலாற்றை எழுதுவதொன்றே நோக்கம்.
போற்றுவோர் போற்றட்டும். புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும். தொடர்ந்து செல்வேன்.
வரலாறு என்பது கற்பனையாய் புனையும் கவிதையோ கதையோ இல்லை.
புதினமோ புராணமோ இல்லை.அது ஒரு புகைப்படமோ, ஓவியமோ இல்லை.வரலாற்றில் கற்பனைக்கோ, உயர்வு நவிற்சிக்கோ இடமில்லை.
இது கடந்த கால உண்மை நிகழ்வுகளின் பதிவேடு. உண்மை சம்பவங்களின் வரைபடம்.
ஒரு இனமும், சமுதாயமும், நாடும் முன்னேற அவை தங்களுடைய கடந்த கால வரலாற்றை தெளிவாக அறிந்திருக்கவேண்டும்.
தன்னை அறியாதவன், தன் இனத்தை உணராதவன், தன் சமூகசிந்தனை அற்றவன், தன் கடந்த கால வ்ரலாற்றை தெரியாதவன் ஜடமாகி, பிணமாகி பின் மண்னாகிறான்.
நாம் நம் முன்னோர்களின் ஆவணக்களை பாதுகாக்க மறந்ததினால் மற்றவர்கள் உரிமை கொண்டாட ஆரமிதுவிட்டனர்
இனியாது பாதுகாப்போம் என்ற கடமையுடன் ………
முத்தரைய குல நாகரீகத்தையும், பண்பாட்டையும், வளர்ச்சியையும் விளக்கும் வகையில் தெளிவாக உணர்ந்து மறைந்து போன அல்லது மறைக்கப்பட்ட பழைய வரலாற்றுச் சுவடுகளை நம் இளைய தலைமுறையினர் அறிய வழி செய்திடல் வேண்டும்.
அன்பும், கருனையும், பரிவும், பற்றும், பணிவும், வீரமும், விவேகமும் எம் குல சொத்து. இளைய தலைமுறையினர் இவை அறிந்து ஆர்வத்துடன் செயல்படின் வரலாற்றில் தடம் பதித்த எமது இனம் மீண்டும் காலத்தையும் வென்று நிற்க்கும் என்பதில் ஐயமில்லை.
நேற்று தோன்றிய கட்சிகள் சங்கங்கள சாதியை வைத்து காரியங்கள் சாதிப்பது அனைவரும் அறிந்ததே இந்நேரத்தில் நம் இனத்திற்குள் ஒற்றுமை அவசியமான ஒன்று…
இணையத்தில் நம் உறவுகளுக்கு நம்மாலான ஏதேனும் ஒரு தகவல் தெரிவிப்போம் உபயோகமாக …
ஒன்றுபடுவோம் .. வெல்வோம்…..
மனிதனாக பிறந்ததில் மகிழ்ச்சி துளியும் இல்லை…முத்தரையனாக பிறந்ததற்கு இணை வேறு எதுவும் இல்லை …சிதறி கிடக்கும் என் சொந்தங்களே அணி திரள்வீர் இன மானம் காக்க….
என்றும் அன்புடன் ….

உலக முத்தரையர் சங்கம்

முத்தரையர்கள் முன்னேற்றம் அடையாததற்கு காரணம் ?

21 ஜன., 2013

பட்டுக்கோட்டை கூட்டம்


நண்பர்களே ,அனைத்து மாவட்டங்களில் இருந்தும் நமது நண்பர்கள் பட்டுக்கோட்டை கூட்டதிருக்கு கிளம்ப ஆயித்தமாகி கொண்டிருக்கின்றனர் ,நண்பர்கள் வாகனங்கள் மற்றும் ரயில்கள் ,பேருந்துகள் என முன்பதிவுகள் செய்து முடித்து விட்டதாக நண்பர்கள் தகவல்கள் தருகின்றனர் ,மேலும் தங்களின் சுற்றம் மற்றும் உறவுகளையும் அழைத்து வருவதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர் ,அதேப்போல் சிறப்பு விருந்தினர்களும் வருகை தரவுள்ளனர் அவர்களும் தயார் ,பட்டுக்கோட்டை களமும் தயாராக உள்ளது ,நமது நிகழ்ச்சி அமைப்பளார் திரு,ராஜ்குமார் வேகமாக சுழன்று கொண்டிருக்கிறார் ,நீண்ட கால இடைவெளிக்கு பிறகு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கலந்து கொள்ளும் கூட்டம் அநேகமாக இதுவாகத்தான் இருக்கும் ,அதேப்போல் ஆந்திர மாநில முதிராஜ் சங்க நிர்வாகிகள் மூன்று பேரும் கலந்து கொள்கின்றனர் என்பது மேலும் சிறப்பு .
நண்பர்களே மேலும் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி விரைவில் தமிழ்நாடு ,ஆந்திரா ,கர்நாடகா மூன்று மாநில மக்களும் பங்கு பெரும் வகையில் திருப்பதி அல்லது ஹைதராபாத் நகரில் விரைவில் கூட்டம் நடத்த ஆலோசனைகளும் நடைபெற்று வருகிறது ,அதேபோல் கேரளா சங்க நிர்வாகிகளை தொடர்புகொள்ளவும் முயற்சி மேற்கொண்டிருக்கிறோம் ,அது குறித்தான அறிவிப்பு விரைவில் உங்களை வந்தடையும் அதற்க்கும் இப்போதே தயாராகுங்கள் அதேப்போல் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு வேலூர் மாநகரில் திறந்தவெளி மைதான கூட்டதிருக்கான ஆலோசனை நடத்த உள்ளோம் அது திருச்சி சதய விழாவிற்கு பிறகு தேதி முடிவு செய்யப்படும் .
அதேப்போல் அரசுக்கு நமது 15% அரசு வேலை மற்றும் கல்வி இட ஒதிக்கீடு மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கோரி கோரிக்கை முன் வைத்து மாவட்ட தலை நரகங்களில் ஆட்ச்சிய அலுவலகம் மூலம் மனுக்கள் அனுப்பும் நிகழ்ச்சி மேற்கொள்ளவும் இந்த கூட்டத்தில் விவாதிக்கலாம் ,இது அனைத்தும் நம் இன சங்க பெரியவர்கள் ஒத்துழைப்போடு நடக்கும் , ஆகவே நம் இன இளைஞர்கள் சிங்கம் போல் அணி திரண்டு வருமாறு இந்த முத்தரைய இணைய குழுமம் வரவேற்கிறது .
ஒன்று கூடுவோம்!! வென்று எடுப்போம்!! மீண்டும் ஆள்வோம் !!
கருத்துரையிடுக