மனிதனாக பிறந்ததில் மகிழ்ச்சி துளியும் இல்லை…முத்தரையனாக பிறந்ததற்கு இணை வேறு எதுவும் இல்லை

வரலாறு

நம் குல பெருமைகளை அறிந்து போற்றிப் பாதுகாக்க வேண்டும் அவர்கள் வழிவந்த நம் பரம்பரையினரின் நீங்காக் கடமையும் உரிமையும் ஆகும்.
நான் உலக வரலாற்றையோ, நாட்டு வரலாற்றையோ எழுதப்புகவில்லை. எனது இனத்தையும், குலத்தையும் நான் அறிந்த, என் அறிவிக்குப் புலனாகும் வரலாற்றை தொகுத்துள்ளேன்.
இது பலருக்கு கனிச்சாராய் இனிக்கலாம். சிலருக்கு எட்டிக்காயாய்க் கசக்கலாம். ஆனால் எனக்கு உண்மையன எம் இன வரலாற்றை எழுதுவதொன்றே நோக்கம்.
போற்றுவோர் போற்றட்டும். புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும். தொடர்ந்து செல்வேன்.
வரலாறு என்பது கற்பனையாய் புனையும் கவிதையோ கதையோ இல்லை.
புதினமோ புராணமோ இல்லை.அது ஒரு புகைப்படமோ, ஓவியமோ இல்லை.வரலாற்றில் கற்பனைக்கோ, உயர்வு நவிற்சிக்கோ இடமில்லை.
இது கடந்த கால உண்மை நிகழ்வுகளின் பதிவேடு. உண்மை சம்பவங்களின் வரைபடம்.
ஒரு இனமும், சமுதாயமும், நாடும் முன்னேற அவை தங்களுடைய கடந்த கால வரலாற்றை தெளிவாக அறிந்திருக்கவேண்டும்.
தன்னை அறியாதவன், தன் இனத்தை உணராதவன், தன் சமூகசிந்தனை அற்றவன், தன் கடந்த கால வ்ரலாற்றை தெரியாதவன் ஜடமாகி, பிணமாகி பின் மண்னாகிறான்.
நாம் நம் முன்னோர்களின் ஆவணக்களை பாதுகாக்க மறந்ததினால் மற்றவர்கள் உரிமை கொண்டாட ஆரமிதுவிட்டனர்
இனியாது பாதுகாப்போம் என்ற கடமையுடன் ………
முத்தரைய குல நாகரீகத்தையும், பண்பாட்டையும், வளர்ச்சியையும் விளக்கும் வகையில் தெளிவாக உணர்ந்து மறைந்து போன அல்லது மறைக்கப்பட்ட பழைய வரலாற்றுச் சுவடுகளை நம் இளைய தலைமுறையினர் அறிய வழி செய்திடல் வேண்டும்.
அன்பும், கருனையும், பரிவும், பற்றும், பணிவும், வீரமும், விவேகமும் எம் குல சொத்து. இளைய தலைமுறையினர் இவை அறிந்து ஆர்வத்துடன் செயல்படின் வரலாற்றில் தடம் பதித்த எமது இனம் மீண்டும் காலத்தையும் வென்று நிற்க்கும் என்பதில் ஐயமில்லை.
நேற்று தோன்றிய கட்சிகள் சங்கங்கள சாதியை வைத்து காரியங்கள் சாதிப்பது அனைவரும் அறிந்ததே இந்நேரத்தில் நம் இனத்திற்குள் ஒற்றுமை அவசியமான ஒன்று…
இணையத்தில் நம் உறவுகளுக்கு நம்மாலான ஏதேனும் ஒரு தகவல் தெரிவிப்போம் உபயோகமாக …
ஒன்றுபடுவோம் .. வெல்வோம்…..
மனிதனாக பிறந்ததில் மகிழ்ச்சி துளியும் இல்லை…முத்தரையனாக பிறந்ததற்கு இணை வேறு எதுவும் இல்லை …சிதறி கிடக்கும் என் சொந்தங்களே அணி திரள்வீர் இன மானம் காக்க….
என்றும் அன்புடன் ….

உலக முத்தரையர் சங்கம்

முத்தரையர்கள் முன்னேற்றம் அடையாததற்கு காரணம் ?

21 ஜன., 2013

விவசாயிகள் தற்கொலை :


தமிழக அரசுக்கு நோட்டீஸ்

//விவசாயிகள் தற்கொலை செய்வது கொள்வது பற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரும் மனு மீது தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பா சாகுபடி பாதித்ததால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு இழப்பீடு அளிக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்கள் நடைபெறா வண்ணம் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி ஜி. ராஜேந்தரன் என்ற வழக்குரைஞர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) எலிபி தர்மாராவ் மற்றும் அருணா ஜெகதீசன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இந்த மனு மீது அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், விவசாயிகள் தற்கொலை என்பது பொய்யான தகவல். சொந்த காரணங்களாலும், குடும்ப பிரச்னை காரணமாகவும் தற்கொலை செய்து கொள்பவர்களை, பயிர் சாகுபடி பாதித்ததால் தற்கொலை செய்து கொண்டதாக தவறான தகவல்கள் பரபரப்பபடுகின்றன என்று கூறியிருந்தது.

இந்த பதில் மனுவை எதிர்த்து ராஜேந்திரன் மீண்டும் மனு தாக்கல் செய்தார். அதில், விவசாயிகள் தற்கொலையை அரசு மூடி மறைக்கப் பார்க்கிறது. தவறான தகவல்களை நீதிமன்றத்தில் தமிழக அரசு அளித்துள்ளது. எனவே டெல்டா விவசாயிகளின் தற்கொலை குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறியுருந்தார்.

டெல்டா மாவட்ட விவசாயிகளின் தற்கொலை குறித்து சிபிஐ விசாரிக்கக் கோரும் மனு மீது தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர் நீதிபதிகள். இதையடுத்து வழக்கு விசாரணை அடுத்த வாரம் புதன் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. // - தினமணி செய்தி

##தண்ணீர் இன்றி சோகத்தில் நடந்த விவசாயிகள் தற்கொலையை அரசு மூடி மறைக்க விவசாயிகள் தற்கொலை என்பது பொய்யான தகவல். சொந்த காரணங்களாலும், குடும்ப பிரச்னை காரணமாகவும் தற்கொலை செய்து கொள்பவர்களை, பயிர் சாகுபடி பாதித்ததால் தற்கொலை செய்து கொண்டதாக தவறான தகவல்கள் பரபரப்பபடுகின்றன என்று கூறும் மாநில அரசு இதை போல நாளை அணு உலை விபத்து ஏற்பட்டால் அதில் இறந்தவர்கள் எல்லாம் மர்ம காய்ச்சல் தலைவலி இறந்தார்கள் என்று அப்பொழுது இதை போல முடிமறைக்கும் வேலையை மாநில அரசு மதிய அரசு ரெண்டும் சேர்ந்து செய்யும்.. சகோதரி செங்கொடி தற்கொலையை காதல் தோல்வி தற்கொலை என்று கூறிய மனம் கேட்ட பத்திரிகைகள்,மக்கள் உள்ள தமிழகம் தானே இது :(##
கருத்துரையிடுக