20 நவ., 2012

மன்னார்குடி அருகில் உள்ள இராதாநரசிம்மபுரம்


எங்கள் ஊரை பற்றிய ஒரு சிறு அறிமுகம்.......
மன்னார்குடி அருகில் உள்ள இராதாநரசிம்மபுரம்..என்பது எங்கள் ஊர்.எங்கள் ஊரிலிருந்து தென்பரை,,வல்லூர்,பாளையகோட்டை என்று நம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் ஊர்கள் ஆரம்பிக்கும்.
எங்கள் ஊரை பொறுத்தவரை இரு தெருக்களாக இரு பகுதியல் நம் மக்களும், நடுவில் மற்றும் மத்திய பகுதில் கள்ளர்கள் உள்ளார்கள்.இராவணன் (சசிகலாவின் உறவினர்) எங்கள் ஊர் தான்.குறைவான என்னிகைல் நாம் இருந்தாலும் கல்வி,அரசியல் விழிப்புணர்வு உடையவர்களாக நாம் உள்ளோம்..1980 இல் எங்கள் தெருவை சேர்ந்த திரு குஞ்சிதபாதம் முத்தரையர் (சிங்கம்) சின்னத்தில் மன்னார்குடி சட்டசபை தேர்தலில் போட்டி போட்டு சுமார் 9000 ஒட்டு வாங்கினர்.திருவாரூர் மாவட்ட முத்தரையர் சங்க தலைவர் திரு நடராஜன்.சோழமண்டல முத்தரையர் கட்சியின் நிறுவனர் திரு புகழேந்தி ஆகியோரும் எங்கள் ஊர் தான். ஒரு டாக்டர்,பல அரசாங்க அலுவலர்கள் (Gazetted level) மற்றும் வீட்டுக்கு ஒருவர் என்று பலர் மலேசியா,சிங்கப்பூர் என்று பணிபுரிகிறார்கள்.எனது சிறுவயதில் இங்கு நடைபெறும் அணைத்து விழாக்கள் (மற்ற இனத்தவர் வீட்டு திருமண வரவேற்புரை கூட) சிறப்பு பேச்சாளர்களாக திரு பாரதிதாசன்(கோ சொசைட்டிஇல் உயரிய பதவி வகித்து ஒய்வு பெற்றுஉள்ளார் ).பாவலர் பால் சாமி இன்னும் பலரின் குறள் கம்பீரமாக ஒலிக்கும்.மேலும் தஞ்சாவூர் ஓவியம்,வரைதல்,புகைப்பட கலைஞர்,கட்டிட கலை,வியாபாரி,கால்நடை நாட்டு வைத்தியர்.மரவேலை,புகைபட கலைஞர்.TV,Phone மெக்கானிக் , டைலரிங்,(பெரம்பு கூடை,அழகிய கைவிசறி செய்வது (தற்போது இவர்களின் வயது மூப்பினால் ஒரு சில தொழில் செய்வது இல்லை) இது போன்ற கலை துறைல் உள்ளார்கள்.
நாம் குறைவான என்னிகைல் வசதி குறைவாக இருந்தாலும் விவசாய கூலிகளாக இருபதைவிட. இதுபோன்ற கலை சம்பந்தப்பட்ட தொழிலில் ஈடுபடும் பொது.நமக்கு ஒரு அங்கீகாரமும்.மரியாதையும் கிடைகிறது. ஊராட்சி தேர்தலில் நாமும்.முகுலோத்தார் என்று மாறி,மாறி வெற்றிபெறுவது வழக்கம்.

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........