5 நவ., 2012

முத்துப்பேட்டை பகுதி முத்தரையர்களின் முந்தைய நிலை ஒரு சிறிய பார்வை நமது நண்பர்களுக்காக



முத்துப்பேட்டையை சுற்றிலும் சுமார் பதினோரு கிராமங்களில் நாம் அருதி பெரும்பான்மையுடன் வாழ்கிறோம் எனக்கு தெரிந்த விவரப்படி .ஆனாலும் எழுபதுகளுக்கு முன் யாரும் எந்த அரசியல் சார்ந்த பொறுப்புகளையும் வகித்ததாக தெரியவில்லை .மறைந்த .திரு .வீ .நடேசன் அவர்களை தவிர ,அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த அந்த காலகட்டத்தில் ,ஆலங்காடு ஊராட்சி மன்ற தலைவராக இருந்து உள்ளுரில் கோலோச்சி வந்த பார்ப்பன பன்னையாராலும் ,சுற்று வட்டாரத்தில் செல்வாக்குடன் இருந்த தேவர் இனத்தவராலும் நிகழும் கொடுமைகளுக்குஎதிராக பொதுஉடமை இயக்கத்தின் துணையோடு போராடினாலும் முழு தீர்வை எட்ட முடியாமல் இருந்துள்ளனர்.பின்னர் 1971 ஆம் ஆண்டு நடை பெற்ற தேர்தலில் ஒன்றியப்பெருந்த்லைவர் பொறுப்பிற்கு பொதுஉடமை இயக்கத்தின் சார்பாக போட்டியிட்டு வென்றுள்ளார் .இவர் பொறுப்பு வகித்த காலத்தில் குறிப்பிடத்தக்கவை ஒரு சில ஆலங்காடு தொடக்கப் பள்ளியை ,நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்தியது ,பேட்டையில்(புதுக்கோட்டகம் சாலை) சாலை வசதியில்லாமல் அவதி பட்ட நம் இனத்தவருக்கு சாலை அமைத்து கொடுத்தது, கற்பகநாதர் குளம் பகுதியில் படித்து இருந்த நம் சமுதாய இளையோர்களை ஆசிரியர்களாக பனி நியமனம் செய்தது .இவருக்குப்பிறகு நம் இன வாக்குகள் பெரும்பான்மையாக இருந்தாலும் அடுத்து நடைபெற்ற தேர்தலில் யாருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை .ஊராட்சி மன்ற தலைவராக ஆலங்காடு .திரு A . சந்திரன் போன்ற ஒரு சிலரே இருந்தனர் .மற்றைய கிராமங்களில் தேவர் இனத்தவரே நம் மக்களின் வாக்குகளை கொண்டு பதவி வகித்தனர் .இன்று நம்மவர்கள் பெரும்பாலும் வகித்து வரும் ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்பே பெரிய கனவாக இருந்துள்ளது .நம்மவர்கள் யாரும் தேவர் இனத்தவரை மீறி தேர்தல்களை சந்திக்க முடியவில்லை .கடும் மிரட்டல்களும் ,சில படுகொலைகளும் நம் மக்களை அச்சம் கொள்ள வைத்தது .அந்த காலகட்டத்தில் காரணம் தெரியாமல் இறந்தவர்களும் ,காணாமல் போனவர்களும் உண்டு ..........


by
P.MANIVANNAN MUTHARAIYAR

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........