4 நவ., 2012

பேட்டையின் பெருமகனார் .திரு.கா.கதிரேசன்.


பேட்டையின் பெருமகனார் .திரு.கா.கதிரேசன்.அவர்கள் .எங்களது ஊரில் நமது சமுதாயத்தில் முதல் பட்டதாரி .அனைத்து இன
சமூகத்தாரிடம் நல்ல அணுகுமுறையும் ,மதிப்பும் கொண்டிருந்தவர் .ஊருக்கு ஒரு மகுடமாய் விளங்கியவர் .அண்ணன் அவர்கள் .1972 க்கு முன்பு வரை தம்பிக்கோட்டை மைனர் பண்ணையால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த ,ஆவுடையார் கோவிலுக்கு சொந்தமான சுமார் 66 ஏக்கர் நிலப்பரப்பில் நம்மவர்களே குடியிருந்தனர் ஆனால் அனுபவிக்கும் உரிமை கிடையாது அதில் இருந்த தென்னை மரங்கள் நம்மவர்களால் நடப்பட்டது .தேவர் இனத்தவரின் அடக்குமுறைகளுக்கும மிரட்டல்களுக்கும் ஆளாக்கப்பட்டிருந்த நம் மக்களை எண்ணி ,அதை உடைத்தெறிய புறப்பட்டார் அண்ணன் கல்லூரி படிப்பை முடித்தவுடன் சில பெரியவர்களின் துணையோடு திருவாடுதுறை ஆதினம் அவர்களை சந்தித்து நிலைமையை விளக்கினார்,இதைக்கேட்ட ஆதீனம் அவர்கள் குடியிருந்து மரம் நட்ட உங்களுக்கே அனுபோக உரிமை தருகிறேன் என்று ஒப்பந்த பத்திரம் எழுதிவிட்டார்கள் .இதனை கேள்விப்பட்ட ஆதிக்க சக்திகள் கடும் சினம் கொண்டனர் .அண்ணனை பல வகையிலும் மிரட்டினர் ,தென்னந்தோப்புகளில் தேங்காய் வ
ெட்டவந்தவர்களை நம்மவர்கள் விரட்டியடித்தனர் .அதுமுதல் அவரை போற்றத்தொடங்கினர் நம் மக்கள் .அவர் சார்ந்து இருந்த தி .மு .கவில் ,ஒன்றியப்பிரதிநிதி ,மாவட்ட பிரதிநிதி ,மாவட்ட விவசாய அணித்தலைவர் ,மற்றும் கோவிலூர் ,பேட்டை ,ஆகிய ஊர்களில் உள்ள இந்து அறநிலயதுறை திருகோவில்களின் அறங்காவலராக பதவி வகித்துள்ளார் .அண்ணன் மறைந்த நாளன்று மாவட்டத்தில் உள்ள தி.மு.க.பொறுப்பாளர்களும் ,மக்கள் பிரதிநிதிகளும் அணைத்து கட்சி ,மத சமுதாயத்தினரும் திரளாக கலந்து கொண்டனர்.அவரது இடத்தை இதுவரை யாராலும் நிரப்பமுடியவில்லை .

அவரது கல்வி சான்றிதழில் முத்துராஜா என்று குறிப்பிட்டு இருந்த காரணத்தால் தான் பார்த்து வந்த நிலவள வங்கி நிர்வாகி ,வேலை பறிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது மகன் திரு ரெத்தின குமார் முத்துப்பேட்டை பேருராட்சி மன்ற உறுப்பினராக உள்ளார் .நமது குழுவில் உள்ள ,சிவகுமார் பரமசிவம் ,பழனிவேல் பரமசிவம் ,இவர்களுக்கு தாய்மாமன் ஆவார். நன்றி

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........